
முத்தையாவை ‘குட்டிப்புலி’ படத்தில் இயக்குநராக அறிமுகப்படுத்தியது சசிகுமார்தான். குட்டிப்புலி படத்தின் வெற்றியை தொடர்ந்து கொம்பன், மருது படங்களை இயக்கினார் முத்தையா. கொம்பன் வெற்றி பெற்ற அளவுக்கு மறுத்து வெற்றி பெறவில்லை.
முத்தையா அடுத்து யாருடைய படத்தை இயக்குவார் என்கிற எதிர்பார்ப்பு நிலவிய சூழ்நிலையில் சசிகுமார், முத்தையாவை அழைத்து மீண்டும் அவருக்கு பட வாய்ப்பை வழங்கி இருக்கிறார்.
ஆம்.. பலே வெள்ளையத் தேவா’ படத்தின் தோல்வியால் தடுமாறிக் கொண்டிருக்கும் சசிகுமார் முத்தையா இயக்கத்தில் நடிக்க தயாராகிவிட்டார். இதன்மூலம் ஒருவருக்கொருவர் கைகொடுத்து பரஸ்பரம் தங்களுக்குள் உதவிக்கரம் கோர்த்திருக்கிறார்கள் என்றே சொல்லவேண்டும்.
இந்த படத்திற்கு ‘கொடிவீரன்’ என்று டைட்டில் வைத்திருக்கிறார்கள். மார்ச் மாதம் 25-ஆம் தேதி இப்படத்தின் படப்பிடிப்பு சிவகங்கையில் துவங்குகிறது.


