புதிய சாதனைக்கு தயாராகும் தனுஷ்..!


ஒரு காலத்தில் ஆங்கில படங்களில் மட்டுமே ஒரு படத்தின் பல பாகங்கள் வெளியாகி வந்தன. இப்போது தமிழ் படங்களிலும் ஒருமுறை வெற்றி பெற்ற படம் பல பாகங்களாக தயாராகி வருகின்றன. இந்நிலையில், தனுஷ் நடித்த ‘வேலையில்லா பட்டதாரி’ (வி.ஐ.பி), ‘மாரி’, ‘கொடி‘ ஆகிய படங்களும் இரண்டு பாகங்களாக உருவாகவிருக்கின்றன.

இதில் ‘வேலையில்லா பட்டதாரி’ படத்தின் இரண்டாம் பாகத்தை ரஜினியின் இளைய மகள் சவுந்தர்யா இயக்குகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு தொடங்கி நடைபெற்று வருகிறது.

பாலாஜி மோகன் இயக்கத்தில் வெளிவந்த ‘மாரி’ படத்தின் இரண்டாம் பாகத்தையும் பாலாஜி மோகனே இயக்கவுள்ளார். இப்படத்தின் ஸ்கிரிப்ட் பணிகள் அனைத்தும் முடிவடைந்துவிட்டது. விரைவில் படப்பிடிப்பு தொடங்கவுள்ளது.

அதேபோல், துரை செந்தில்குமார் இயக்கத்தில் வெளியான ‘கொடி’ படத்தின் இரண்டாம் பாகமும் உருவாகவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தான் மூன்று படங்களின் இரண்டாம் பாகங்களில் தனுஷ் ஒரே காலகட்டத்தில் நடிக்கிறார் என்பது கிட்டத்தட்ட புதிய சாதனை தான்.

இதற்கிடையில், ‘பவர் பாண்டி’ என்ற படத்தையும் இயக்கி வருகிறார். கவுதம் மேனன் இயக்கத்தில் ‘எனை நோக்கி பாயும் தோட்டா’ படத்திலும் நடித்து வருகிறார்.

Leave a Response