
மதகஜராஜா படம் வெளிவரமுடியாத நிலை உருவானது தெரிந்ததுமே, இனி வெளி ஆட்கள் தயாரிக்கும் படங்களில் நடிப்பதில்லை என்பதில் உறுதியாக இருந்த விஷால், தொடர்ந்து தான் உருவாக்கிய விஷால் பிலிம் பேக்டரி’ தயாரிக்கும் படங்களிலேயே நடித்து வந்தார். தன்னுடைய தயாரிப்பு என்பதாலேயே அதை கௌரவ பிரச்சனையாக எடுத்துக்கொண்டு சொன்ன தேதியில் படங்களை ரிலீஸ் செய்தும் வந்தார்..
ஆனால் தற்போது ஒரு மாற்றத்திற்காக அவர் ‘மெட்ராஸ் என்டர்டெயின்மென்ட் நிறுவனம் தயாரிக்கும் ‘கத்திச்சண்டை’ படத்தில் நடித்துள்ளார். வெளிப்படத்தில் நடித்த ராசியோ என்னவோ, இந்தப்படத்தின் ரிலீஸ் மீண்டும் மீண்டும் தள்ளிப்போகிறது.. தீபாவளிக்கே இந்தப்படத்தை திரையிட நினைத்த விஷால், தனது நண்பன் கார்த்தியின் ‘காஷ்மோரா’வுக்காக தனது பட தேதியை மாற்றி வைத்தார்.
இப்போது கருப்பு பணத்தை ஒழிக்க பிரதமர் மோடி எடுத்த நடவடிக்கையால் பணப்புழக்கம் குறைந்து தியேட்டர்களில் கூட்டம் குறைந்துள்ளது.. இந்தநிலையில் படத்தை ரிலீஸ் செய்தால் போட்ட காசை கூட எடுக்கமுடியாது என்பதால் மீண்டும் தேதி குறிப்பிடாமல் ரிலீசை தள்ளிவைத்து விட்டார் விஷால்.


