கவலை வேண்டாம் படத்தின் ஒரே நம்பிக்கை அவர் தான்..!


நன்றாக கணக்கிட்டு பார்த்தால் ஜீவா தனி ஆளாக ஹிட் தந்து 5 வருடங்கள் ஆகிவிட்டது தெரியும். கே.வி.ஆனந்தின் ‘கோ’ படம் தான் அது.. அதன்பின் சுமார் பத்து படங்களில் நடித்துவிட்ட ஜீவாவுக்கு கூட்டு சேர்ந்து நடித்த படங்களில் ஒன்றிரண்டை தவிர அனைத்தும் பிளாப் ரகங்கள் தான். இந்த நிலையில் தான் ஜீவா நடித்துள்ள ‘கவலை வேண்டாம்’ படம் வரும் வெள்ளிக்கிழமை வெளியாகவுள்ளது..

சிம்பு படத்திற்கு அடுத்ததாக அதிக தடவை ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டு மாற்றப்பட்ட படம் இதுவாகத்தான் இருக்கும். எப்படியோ இந்தவாரம் ரிலீசானாலும் கறுப்பு பண நடவடிக்கையால் இந்தப்படத்திற்கு கூடம் வருமா என்பது கொஞ்சம் சந்தேகம் தான்.

இந்தப்படத்தில் ஜீவா, பாபி சிம்ஹா என இரண்டு கதாநாயகர்கள் இருந்தாலும் கூட, இந்தப்படத்தின் இயக்குனர் மீதுதான் படத்தின் வெற்றி ஆதாரப்பட்டு நிற்கிறது என இண்டஸ்ட்ரியில் பேசிக்கொள்கிறார்கள். ‘யாமிருக்க பயமே’ என்கிற காமெடி கலந்த வெற்றிப்படத்தை கொடுத்த டீகே தான் இந்தப்படத்தை இயக்கியுள்ளார்.

Leave a Response