தீபாவளி ரிலீஸ் ; ‘கொடி’க்கு ‘யு’’.. காஷ்மோராவுக்கு ‘யு/ஏ’ சான்றிதழ்..!


வரும் தீபாவளிக்கு ரிலீசாகும் பெரிய படங்கள் என்று பார்த்தால் கார்த்தி நடித்த காஷ்மோரா மற்றும் தனுஷ் நடித்த கோடி என இரண்டு படங்கள் மட்டுமே பந்தயத்தில் நிற்கின்றன. தனுஷ் முதன்முறையாக இரட்டை வேடங்களில் நடித்துள்ளது, அரசியல்வாதியாக நடித்துள்ளது என நிறைய விஷயங்கள் ‘கொடி’ மீதான எதிர்பார்ப்பை அதிகப்படுத்தியுள்ளன. இந்தப்படத்தை பார்த்த தணிக்கை குழுவினர் படத்திற்கு ‘யு’ சான்றிதழ் அளித்துள்ளனர்

அதேபோல காஷ்மோரா படமும் வித்தியாசமான பாணியில் உருவாகியுள்ள படம் தான். காமெடி, ஹாரர் படமா சரித்திர படம் என ‘காஷ்மோரா’ படத்தை எந்த வகைக்குள்ளும் வேண்டுமானாலும் பொருத்தலாம்.. ஆக, தியேட்டருக்கு வரும் ரசிகர்களுக்கு சர்ப்ரைஸ் ட்ரீட் தர காத்திருக்கிறது இந்த ‘காஷ்மோரா’ போர்க்கள கட்சிகள், ஹாரர் என இருப்பதாலோ என்னவோ இந்தப்படத்தை பார்த்த சென்சார் போர்டு அதிகாரிகள் படத்திற்கு ‘யு/ஏ’ சான்றிதழ் அளித்துள்ளனர்.

Leave a Response