திமுக கூட்டணிக் கட்சிகள் வென்ற இடங்கள்

திமுக கூட்​ட​ணி​யில் தொகு​திப் பங்​கீட்​டின்​போது, இரு கம்​யூனிஸ்ட் கட்​சிகளும் இரட்டை இலக்க தொகு​தி​களைப் பெற தீவிர முயற்சி மேற்​கொண்​டன. எனினும், இழுபறிக்​குப் பின்​னர் இரு கட்​சிகளுக்​கும் தலா 5 தொகுதிகள் மட்​டுமே ஒதுக்​கப்​பட்​டன. இதற்கு அப்​போதே அவர்கள் அதிருப்தி தெரிவித்தனர்.

இந்​நிலை​யில், தேர்​தல் முடிவு​கள் கம்​யூனிஸ்ட்​களின் செல்​வாக்கை உறு​திப்​படுத்​தி​யுள்​ளன. இந்​திய கம்​யூனிஸ்ட் கட்சி போட்​டி​யிட்ட 5 இடங்​களில், தளி தொகு​தி​யில் இராமச்​சந்​திரனும், திருத்​துறைப்​பூண்​டி​யில் மாரி​முத்​து​வும் வெற்றி பெற்​றனர்.

அதே​போல், மார்க்​சிஸ்ட் கம்​யூனிஸ்ட் கட்சி சார்​பில் பத்​ம​நாபபுரம் தொகு​தி​யில் ஆர்​.செல்​ல​சாமி​யும், கீழ்​வேளூரில் லதா​வும் வெற்றி வாகை சூடி​யுள்​ளனர். இதன்​மூலம் இரு பொதுவுடமைக் கட்​சிகளும் தலா 2 இடங்​களில் வெற்​றியை பதிவு செய்​துள்​ளன.

திமுக கூட்​ட​ணி​யில் 8 தொகு​தி​களைப் பெற்ற விடுதலைச் சிறுத்தைகள் கட்சி, காட்​டுமன்​னார் கோயில் (ஜோ​தி​ மணி) மற்​றும் திண்​டிவனம் (வன்​னியரசு) ஆகிய 2 இடங்​களில் வெற்றி பெற்​றுள்​ளது.

10 தொகு​தி​களில் போட்​டி​யிட்ட தேமு​தி​கவோ, பிரேமலதா விஜய​காந்த் (விரு​த்தாசலம்) பெற்ற வெற்​றி​யின் மூலம் ஒரேயொரு இடத்​தில் மட்டும் வெற்றி பெற்றுள்ளது.

28 தொகுதிகளில் போட்டியிட்ட காங்கிரசுக் கட்சி,மயிலாடுதுறை,மேலூர்,குளச்சல்,விளவங்கோடு,கிள்ளியூர்
ஆகிய 5 தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளது.அக்கட்சி மொத்தம் 16,61,312 வாக்குகள் பெற்று 3.37 விழுக்காடு வாக்குகள் பெற்ற கட்சி என்கிற இடத்தைப் பிடித்திருக்கிறது.

Leave a Response