அசாம் தேர்தல் முடிவுகள் – விவரம்

அசாமில் 126 சட்​டப்​பேர​வைத் தொகு​தி​கள் உள்​ளன.2026 ஏப்​ரல் 9 ஆம் தேதி அசாமில் ஒரேகட்​ட​மாக தேர்​தல் நடை​பெற்​றது.இதில் ஆளும் பாஜக, அசாம் கண பரிஷத் மற்​றும் போடோ மக்​கள் முன்​னணி ஆகிய கட்​சிகள் அடங்​கிய தேசிய ஜனநாயகக் கூட்​டணி (என்​டிஏ) போட்​டி​யிட்​டது.

காங்​கிரசு தலை​மையி​லான கூட்​ட​ணி​யில் ராய்​ஜோர் தளம், ஏஜெபி, சிபிஐ (எம்), ஏபிஹெச்​எல்சி மற்​றும் சிபிஐ (எம்​எல்) ஆகிய கட்​சிகள் போட்டியிட்டன.

இதுத​விர அனைத்து இந்​திய ஜனநாயக முன்​னணி (ஏஐ​யுடிஎப்) தனி​யாகப் போட்​டி​யிட்​டது.

இந்தத் தேர்தலில் 85.96% வாக்​கு​கள் பதி​வாகின. 722 வேட்​பாளர்​கள் போட்​டி​யிட்​டனர்.

இந்​நிலை​யில்,அசாமில் பதி​வான வாக்​கு​கள் நேற்று எண்​ணப்​பட்டு முடிவு​கள் அறிவிக்​கப்​பட்​டன.ஆட்​சி​யைப் பிடிக்க 64 இடங்​கள் தேவைப்​படு​கின்​றன.

இதில் ஆளும் பாஜக தலை​மையி​லான என்​டிஏ கூட்​டணி 102 தொகு​தி​களில் வெற்றி பெற்​றுள்​ளது.இதில் பாஜக 82, போடோலாந்து மக்​கள் முன்​னணி 10, அசாம் கண பரிஷத் 10 இடங்​களில் வெற்றி பெற்​றுள்​ளன.
இதன்​மூலம் இக்​கூட்​டணி தொடர்ந்து 3 ஆவது முறை​யாக வெற்றி பெற்​றுள்​ளது.ஹிமந்த பிஸ்வா சர்மா 2 ஆவது முறை​யாக முதலமைச்ச​ராகப் பொறுப்​பேற்​பார் எனத் தெரி​கிறது.

அங்கு 2016 ஆம் ஆண்டு பாஜக முதல்முறை​யாக ஆட்​சி​யைப் பிடித்​தது.அப்​போது சர்​வானந்த சோனோ​வால் முதலமைச்ச​ரா​னார்.2021 இல் நடை​பெற்ற தேர்​தலில் பாஜக 2 ஆவது முறை​யாக ஆட்​சி​யைப் பிடித்​தது.அப்​போது, ஹிமந்த பிஸ்வா சர்மா முதலமைச்சரா​னார்.

காங்​கிரசு தலை​மையி​லான எதிர்க்​கட்​சிகள் கூட்​டணி 21 இடங்​களி​லும் ஏஐயுடிஎப் 2 இடங்​களி​லும்
திரிண​மூல் காங்​கிரசுக் கட்சி ஒரு இடத்​தி​லும் வெற்றி பெற்​றுள்​ளன.

2021 ஆம் ஆண்டு நடை​பெற்ற அசாம் சட்​டப்​பேர​வைத் தேர்​தலில் பாஜக 75 இடங்​களி​லும் காங்​கிரசுக் கூட்​டணி 50 இடங்​களி​லும் வெற்றி பெற்​றன.இந்​தத் தேர்​தலில் காங்​கிரசுக் கூட்​டணி வென்ற தொகு​தி​கள் மேலும்
குறைந்​துள்​ளன.

Leave a Response