காசு கொடுப்பவர்கள் கருத்துக்கணிப்பில் முந்துகின்றனர் – சீமான் வெளிப்படை

சிவகங்கை மாவட்​டம் காரைக்​குடி அமராவ​திபுதூர், தேவகோட்​டை​யில் நாம் தமிழர் கட்சி வேட்​பாள​ரும்,
அக்​கட்​சி​யின் தலைமை ஒருங்​கிணைப்​பாள​ரு​மான சீமான் நேற்று தீவிர பரப்புரை மேற்​கொண்​டார்.

அப்​போது அவர் பேசி​ய​தாவது….

வீடு​களை வாடகைக்கு பிடித்​துக் கொடுப்​பவர் வீட்டு புரோக்​கர்.அதே​போல,வெளி​நாடு​களுக்​குச் சென்று முதலீடுகளைக் கொண்டு வருபவர் நாட்டு புரோக்​கர்.400 ஆண்​டு​களுக்கு முன்​பு,வணி​கம் செய்ய வந்து நாட்​டைப் பிடித்​துக் கொண்​ட​வர்​களை மிக​வும் சிரமப்​பட்​டு,உயிர்த் தியாகங்​கள் செய்து விரட்டி அடித்​தோம்.அவர்​களை
மீண்​டும் வா, வா என்று அழைக்​கின்​றனர்.உழைப்பைச் சுரண்டி இலாபத்தை எடுத்​துச் செல்​லத்​தான் பன்​னாட்டு
நிறு​வனங்​கள் வரு​கின்​றன.நாடு பொருளா​தார விடு​தலை அடைய​வில்லை என்​றால்,அது சுதந்​திர நாடு அல்ல, அடிமை நாடு.

தனி​யார்​ம​யம் மற்​றும் உலகமயப் பொருளா​தா​ரத்தை கைவிட்​டு,தற்​சார்​பு,பசுமைப் பொருளா​தா​ரத்தைக்
கட்​டமைக்கத் திட்​ட​மிட்​டுள்​ளேன்.சேவை எல்​லாம் தனி​யாரிடம் உள்​ளது.அதை அரசிடம் கொண்டு வரு​வேன்.
அரசி​யல்,கல்வி எல்​லாமே வியா​பார​மாகி விட்​டது.காசு கொடுத்​தவர்​கள் கருத்​துக் கணிப்​பில் முந்​துகின்​றனர்.நான் காசு கொடுப்​ப​தில்​லை,அதனால் எப்​போதும் பின்​தங்​கியே இருப்​பேன்.தேர்​தல் முடிவு வந்​ததும் நான் முந்​து​வேன்.

நான் யாருக்​கும் ரூ.1,000 கொடுக்க மாட்​டேன்,உள்​ளூரிலேயே ரூ.5,000 வரு​வாய் கிடைக்க ஏற்​பாடு செய்​வேன். மற்ற அரசி​யல்​வா​தி​கள் மக்​களை வாக்கு என்று பார்க்​கின்​றனர்,நான் உயி​ராகப் பார்க்​கிறேன்.தமிழ்நாட்டில் பொருளா​தார நெருக்​கடி வரவேண்​டாம் என்​றால் எங்​களுக்கு வாக்​களி​யுங்​கள்.ஆளும்கட்​சிகளின் பொருளா​தா​ரம் சாரா​யம்.எங்​களது பொருளா​தா​ரம் பால்.நீங்​கள் உழைக்​கும் பணத்​தை,உழைப்பே இல்​லாமல் ஜிஎஸ்டி என்ற பெயரில் அடவடி​யாகப் பறித்து வரு​கிறது ஒன்றிய அரசு.

நாம் நடத்​து​வது கட்சி அல்ல,மக்​களுக்​கான மாற்​றத்​துக்​கான புரட்​சி.36 இலட்​சம் வாக்​கு​களை நாம் 1 கோடியே 36 இலட்​சம் வாக்​கு​களாக மாற்றமுடி​யும்.கோடிகளைக் கொடுக்​காமல் கொள்​கையைச் சொல்லி வாக்கு பெறமுடி​யும். வாக்​குக்கு அனை​வரும் காசு,இலவசம் கொடுக்​கின்​றனர்.ஏனென்​றால் அவர்​களிடம் நம்​பிக்கை இல்​லை.

நம்​பிக்கை இல்​லாதவர்​களிடம் நாட்டை ஒப்​படைக்க முடி​யாது.நாம் மானமுள்ள தமிழன் என்று காட்டவேண்​டும். வறுமை​யும்,தோல்​வி​யும் கற்​றுக் கொடுக்​காததை,எந்தப் பல்​கலைக்​கழக​மும் கற்​றுக் கொடுக்​காது.நமது வெற்​றியை எதிரி​களால் தள்​ளிப்​போட முடி​யும்,தடுக்க முடி​யாது.

இவ்​வாறு அவர் பேசி​னார்.

Leave a Response