காலச்சுவடு செய்த அயோக்கியத்தனம் -சான்றுடன் வெளியிட்டார் திருமுருகன்காந்தி

பிரேமா ரேவதி எழுதிய வரிகளை தமிழினி எழுதியதாக பிரசுரம் செய்த காலச்சுவடு உடனடியாக பிரதிகளை திரும்பப் பெற்று மன்னிப்பு கோரவேண்டும் என்று மே 17 இயக்கம் திருமுருகன்காந்தி கூறியுள்ளார். இதுபற்றி அவருடைய பதிவு….

இறந்து போன ஒரு பெரும் போராளி எழுதாத வரிகளை, அவர் எழுதியதாக பிரசுரம் செய்திருப்பது கடைந்தெடுத்த அயோக்கியத்தனம்.

கைகளில் ரத்தம் தோய்ந்த சிவசங்கர மேனனை வைத்து வெளியீடு செய்கிற பாசிச அரசின் கைக்கூலித்தனத்தினை கேள்வி கேட்கமுடியாதவர்கள், காலச்சுவட்டோடு சேர்ந்து நின்று புலிகளை கேள்வி எழுப்பும் யோக்கியதையும் இதோடு சேர்த்தே கேள்விக்குள்ளாக்குகிறோம். உங்களது சோ-கால்டு தலித்திய-கம்யூனிச முற்போக்கு முகமூடி ஒரு அரச கைக்கூலியுடன் சேர்ந்து நிற்பதை பார்க்கும் பொழுதே அறியமுடிகிறது.

உங்களது ’சோ-கால்டு முற்போக்கு’ என்பது் மாவோயிஸ்டுகள், பழங்குடிகள், தலித்துகள், காசுமிரிகள், அசாமியர்கள், இசுலாமியர், வடகிழக்கில் போராடும் மக்கள், மணிப்பூரில் பாலியல் வன்முறைக்குள்ளாகும் பெண்கள் ஆகிய பயங்க்ரவாத செயல்களை செய்யும் இந்தியாவின் உயர் ராணுவ-பாதுகாப்பு அதிகாரியாக இருந்து செயல்பட்ட சிவசங்கரமேனன் எனும் பாதுகாப்பு ஆலோசகரை வைத்து புத்தகம் வெளியிடும் ஒரு அரச கைக்கூலியோடு சேர்ந்து நிற்கும் போதே அம்பலப்பட்டு சந்தி சிரிக்கிறது.

இந்திய அரசின் கைகூலியாக இருப்பவர்களுக்கு இந்திய அரசினை எதிர்த்து நின்று வேளாள உயர்சாதி திமிரை ஒழித்து, ஏகாதிபத்தியத்தினை எதிர்த்து முற்போக்கு அரசியலை முன்னெடுத்த விடுதலைப்புலிகள் பாசிஸ்டுகளாகவே தெரிவார்கள். ஏனெனில் நீங்கள் இந்திய -இந்துத்துவ பாசிச அரசின் தொங்கு சதைகள்.

நீங்கள் ஒன்றிணைந்து இன்று தமிழினி எனும் போராளியின் மரணத்தினை பயன்படுத்திக்கொண்டு உங்களது இந்திய அரசு கைக்கூலித்தன கருத்தினை புலிகள் மீது தமிழினி சுமத்தியதாக அப்பட்டமான பொய்யை, புரட்டுகளை செய்திருக்கிறீர்கள்.

காலச்சுவடின் திருட்டு-அயோக்கியத்தனத்தினை கண்டிக்க எழுத்தாளர்கள், படைப்பாளிகள், சிந்தனையாளர்கள் முன்வரவேண்டும்.

இது போன்ற அயோக்கியத்தனத்தினை வேறு மாநிலங்களில் செய்திருப்பார்களெனில் அம்மாநில படைப்பாளிகள் தங்களது ஆளுமை, சுயமரியாதை நிமித்தம் தங்களது எதிர்ப்புகளை பலமாக பதிவு செய்திருப்பார்கள்.

உங்கள் மெளனம் அவமானகரமானது. ஒருவரின் மரணத்திற்கு பின் செய்யும் இந்த அயோக்கியத் தனத்தினைக் கூட எதிர்க்க உங்களது சுயமரியாதை விழிக்கவில்லையெனில் உங்களது நேர்மை கேள்விக்குள்ளாக்கப்படவேண்டிய ஒன்று.

காலச்சுவட்டிற்கு நெருக்கமான புலம்பெயர் கவிஞர் வகையறாக்கள் கண்ணனோடு சேர்ந்து கொண்டு கள்ளமெளனம் காக்கும் கீழ்த்தரமான செயல்களையும் கவனிக்கவே இயலுகிறது…

காலச்சுவடு எனும் கீழ்த்தரமான பார்ப்பனிய-இந்திய-இந்துத்துவ பதிப்பகத்தின் மீதான எதிர்ப்பினை பதிவு செய்ய முன்வாருங்கள்.

காலச்சுவடு பதிப்பகமே,
தமிழினி பெயரில் செய்யப்பட்ட கீழ்த்தரமான பதிவினை உடனடியாக நீக்கு. பிரதிகளை திரும்பப்பெறு, பகிரங்கமாக மன்னிப்பு கேள்.

படத்தில் : தமிழினி எழுதாத வாசகம்(சிவப்பு கோடிட்ட பகுதியில்). பிரேமா ரேவதி என்பவர் எழுதியதை தமிழினி எழுதியதாக காலச்சுவடு செய்த பதிவு

Leave a Response