
CONIFA உலககோப்பை தகுதிச்சுற்றில் வாகை சூடிய தமிழீழ உதைப்பந்தாட்ட அணி.
2018ம் ஆண்டு நடைபெறவுள்ள CONIFA உதைபந்தாட்ட உலககோப்பைக்கான தகுதிச்சுற்று மற்றும் Remscheider Challenger கிண்ணத்திற்கான போட்டி தமிழீழம் மற்றும் ரோமா தேசிய அணிகளிற்கிடையில் 13.03.2016 அன்று ஜெர்மனியில் ரெம்சைட் (Remscheid) நகரத்தில் நடைபெற்றது.
ரோமா அணிக்கெதிராக விளையாடிய தமிழீழ அணி 4 :1 என்ற கணக்கில் வெற்றியை தழுவிக்கொண்டது. தமிழீழ அணி சார்பில் சுஜன் சிவநேசமூர்த்தி (23′) மற்றும் ஜிவிந்தன் நவநீதகிருஷ்ணன் (78′) ஆகியோர் தலா ஒரு இலக்கையும் பானுசாந்த் குலேந்திரன் (17′,90′)இரு இலக்குகளையும் எடுத்து அணியின் வெற்றிக்கு வித்திட்டனர். ரோமா அணி சார்பில் எயோப் Eyob (82′) ஒரு இலக்கை எடுத்தார்.
இப் போட்டியில் வெற்றியடைந்ததன் மூலம் தமிழீழ அணி 2018ம் ஆண்டு CONIFA உலகக்கோப்பை போட்டிக்கு தகுதிபெற்றதுடன் Remscheider Challenger கிண்ணத்தையும் கைப்பற்றியது. அத்துடன் 12.03.2016 அன்று நடைபெற்ற நட்புரீதியான போட்டியில் 13 :0 என்ற கணக்கில் வெற்றியடைந்ததும் குறிப்பிடத்தக்கதாகும்.
தமிழீழ தேசிய அணிக்கு விளையாடுவதற்காக ஜெர்மனி, ஐக்கிய இராட்சியம், பிரான்சு, இத்தாலி மற்றும் கனடா ஆகிய நாடுகளில் இருந்து வீரர்கள் வருகை தந்திருந்தனர்.


