ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் – நாம் தமிழர் வேட்பாளர் இவர்தான்

ஈரோடு கிழக்கு சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தல் பிப்ரவரி 5 ஆம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இத்தேர்தலில் திமுக கூட்டணி சார்பாக வி.சி.சந்திரகுமார் போட்டியிடுகிறார்.

அதிமுக், தேமுதிக,பாஜக கூட்டணி ஆகியவை இத்தேர்தலில் போட்டியிடவில்லை என்று அறிவித்துவிட்டன.

நாம் தமிழர் கட்சி, தேர்தலில் போட்டியிடவிருக்கிறது.

2023 ஆம் ஆண்டு நடந்த இடைத்தேர்தலில் நாம் தமிழர் கட்சியின் வேட்பாளராக அதன் மகளிர் பாசறை துணைச் செயலாளார் மேனகா நவநீதன் போட்டியிட்டார.அவர் 10827 வாக்குகள் பெற்றிருந்தார்.

இம்முறையும் அவரே போட்டியிடுவார் என்று எதிர்பார்க்கப்பட்டது.ஆனால் அதில் மாற்றம் நடந்துள்ளது.

அக்கட்சி சார்பாக சீதாலட்சுமி போட்டியிடவிருக்கிறார்.இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு நாளை வெளியாகும் என்று சொல்லப்படுகிறது.

கோபியைச் சேர்ந்த இவர் 2024 ஆம் ஆண்டு நடந்த நாடாளுமன்றத் தேர்தலில் திருப்பூர் பாராளுமன்றத் தொகுதியில வேட்பாளராகப் போட்டியிட்டவர் என்பது குறிப்பிடத்தக்கது.

2023 ஆம் ஆண்டு நடந்த இடைத்தேர்தலில் திமுக, அதிமுக, தேமுதிக, நாம் தமிழர் ஆகிய கட்சிகள் போட்டியிட்டன.

இப்போது திமுகவும் நாம் தமிழர் கட்சியும் மட்டுமே களத்தில் இருக்கின்றன.

இதனால் கடந்தமுறையைவிட அதிக வாக்குகளை நாம் தமிழர கட்சி பெறும் என்று எதிர்பாரக்கப்படுகிறது.

அதேநேரம் பெரியார் குறித்து சர்ச்சைக்குரிய கருத்தை சீமான் பேசியிருப்பதால் அது நாம் தமிழர் கட்சியின் வாக்கு வங்கியைப் பாதிக்கும் என்றொரு கருத்தும் நிலவுகிறது.

இரண்டில் எது நடக்கும் என்பது பிப்ரவரி எட்டாம் தேதி தெரிந்துவிடும்.

Leave a Response