விவசாயிகள் துன்புறுத்தல் திட்டம் – மோடி மீது இராகுல் காட்டம்

காங்கிரசுக் கட்சித் தலைவர் இராகுல்காந்தி, பிரதமர் மோடி தலைமையிலான பாஜக அரசைத் தொடர்ந்து விமர்சித்து வருகின்றார்.

இராகுல்காந்தி நேற்று தனது டிவிட்டர் பதிவில்,

பிரதமரின் விவசாயிகள் துன்புறுத்தல் திட்டம்: உயிரிழந்த விவசாயிகளுக்கு எந்த இழப்பீடும் இல்லை.

விவசாயிகள் தற்கொலை குறித்த புள்ளிவிவரங்கள் கிடையாது.

விவசாயிகளின் கடன்கள் அல்ல மோடியின் நண்பர்களின் கடன்கள் தள்ளுபடி.

சரியான குறைந்தபட்ச ஆதார விலை குறித்து பொய் வாக்குறுதி.

பயிர்க் காப்பீடு என்ற பெயரில் இன்சூரன்ஸ் நிறுவனங்களுக்கு ரூ.40 ஆயிரம் கோடி வருமானம்.

விவசாயிகளுக்கு 2022 ஆம் ஆண்டில் வருமானம் இரண்டு மடங்காகும் என்று பிரதமர் கூறினார். ஆனால் அவர்களது துன்பம் தான் இரண்டு மடங்காக ஆகியுள்ளது

இவ்வாறு அவர் கடுமையாக விமர்சித்துள்ளார்.

அவ்ருடைய விமர்சனங்கள் நூறு விழுக்காடு நியாயமானவை. இதற்கு மோடி அரசு பதில் சொல்லியே ஆகவேண்டும் எனப்பலர் கருத்துத் தெரிவித்து வருகிறார்கள்.

Leave a Response