தில்லியைக் கலக்கும் இளைஞர் காங்கிரசின் பதாகை – மோடி ஆட்சிக்கு அவமானம்

சமையல் எரிவாயு விலை மீண்டும் ரூ.50 உயர்த்தப்பட்டுள்ளது. சென்னையில் சமையல் எரிவாயு உருளை விலை ரூ.1068.50 ஆக அதிகரித்திருக்கிறது.தில்லியில் விலை ரூ 1053. சமையல் எரிவாயு விலை ரூ.1000 ஐக் கடந்த பிறகும் மாதம் தவறாமல் தொடர்ந்து உயர்த்தப்பட்டு வருகிறது. சமையல் எரிவாயு விலை கடந்த 14 மாதங்களில் 12 முறை உயர்த்தப்பட்டுள்ளது.

கடந்த ஆண்டில் ரூ.710 ஆக இருந்த உருளை விலை இதுவரை ரூ.358 உயர்த்தப்பட்டிருக்கிறது. இது 50.44% உயர்வு ஆகும்.

உலகச் சந்தையில் சமையல் எரிவாயு விலை உயரவில்லை.உலகச் சந்தையில் விலை குறையும் போதும் கூட உள்நாட்டில் விலை உயர்த்தப்படுவது ஏன்?

என ஒன்றிய மோடி அரசை நோக்கிப் பலரும் கேள்வி எழுப்பி வருகிறார்கள்.

இந்நிலையில், தில்லி மாநகரகெங்கும் இளைஞர் காங்கிரசு சார்பில் ஒரு விளம்பரப் பதாகை வைக்கப்பட்டுள்ளது.

அதில், பாஜகவைச் சேர்ந்த தற்போது அமைச்சராக இருக்கும் ஸ்மிருதிராணி, 2014 ஆம் ஆண்டு காங்கிரசு ஆட்சியின் போது எரிவாயு உருளை விலை 410 ரூபாயாக இருந்தபோது தெருவில் அமர்ந்து அதற்கு எதிராகப் போராட்டம் நடத்திய புகைப்படத்தைப் போட்டு அதன் அருகில் தற்போது ரூ 1053 க்கு விற்பனையாகும் போது அட்டகாசமாகச் சிரித்துக் கொண்டிருக்கும் படத்தைப் போட்டு அந்தப் பதாகை வைக்கப்பட்டுள்ளது.

அப்பதாகை பொதுமக்களின் ஏகோபித்த வரவேற்பைப் பெற்றுள்ளதாகவும் பாஜகவினருக்குப் பெருத்த அவமானத்தை ஏற்படுத்தி வருவதாகவும் தில்லியில் வசிப்போர் கூறுகின்றனர்.

Leave a Response