இன்றும் உயர்ந்தது பெட்ரோல் டீசல் விலை – மக்கள் கோபம்

எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு தெரிவிக்கின்ற போதும் மக்கள் சாபம் விடும்போதும் கவலையில்லாமல் பெட்ரோல் டீசல் விலையை உயர்த்திக் கொண்டேயிருக்கிறது மோடி அரசு.

சென்னையில் நேற்று ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.103.01-ஆகவும், டீசல் ரூ.98.92-க்கும் விற்பனையானது.

இன்று பெட்ரோல் விலை லிட்டருக்கு 30 பைசா அதிகரித்து ரூ.103.31 ஆகவும், மற்றும் டீசல் விலை லிட்டருக்கு 34 பைசா உயர்ந்து ரூ.99.26 விற்பனையாகிறது. இந்த விலை உயர்வு இன்று காலை முதல் அமலுக்கு வந்தது.

நடப்பு மாதத்தில் பெட்ரோல், டீசல் விலை 17 ஆவது முறையாக உயர்ந்துள்ளது.பெட்ரோல், டீசல் விலை தொடர்ந்து உயர்ந்து வருவது வாகன ஓட்டிகளுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மோடி மீதும் ஒன்றிய அரசின் மீதும் மக்கள் கோபமாக இருக்கிறார்கள்.

Leave a Response