கைவிட்ட இபிஎஸ் ஓபிஎஸ், 50 இலட்சம் பணம் கட்டி மதுசூதனன் உடலை மீட்ட சசிகலா? – அதிரும் தகவல்

1991 ஆம் ஆண்டு ஜெயலலிதா அரசில் அமைச்சராகப் பணியாற்றியவர் மதுசூதனன். 2010 ஆம் ஆண்டு முதல் அ.தி.மு.க. அவைத் தலைவர் பதவியில் இருந்தவர் மதுசூதனன். முன்னாள் அமைச்சரும், அ.தி.மு.க. அவைத்தலைவருமான இ.மதுசூதனன் (வயது 80) கடந்த சில மாதங்களுக்கு முன்பு கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டார். சிகிச்சைக்குப் பின்னர் அவர் உடல்நலம் தேறினார். அதன்பின்னர் வயது முதிர்வு காரணமாக அவர் அரசியல் பணிகளில் இருந்து ஒதுங்கினார். சென்னை தண்டையார்பேட்டையில் உள்ள அவரது இல்லத்தில் தொடர்ந்து ஓய்வில் இருந்து வந்தார்.

எனினும் அவ்வப்போது அவர் உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டு வந்தார். இதற்காக அவர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். இந்தநிலையில் மதுசூதனன் உடல்நிலை திடீரென மோசம் அடைந்தது. இதையடுத்து அவர், சென்னை ஆயிரம்விளக்கு பகுதியில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார்.

இந்நிலையில், சிகிச்சை பலனின்றி மதுசூதனன் ஆகஸ்ட் 5 ஆம் தேதி பிற்பகல் 3.42 மணிக்கு காலமானார்.இது தொடர்பாக, அதிமுகவின் அதிகாரபூர்வ ட்விட்டர் பக்கத்தில், “அதிமுக அவைத்தலைவர் மதுசூதனன் உடல்நலக் குறைவால் காலமானார்” எனத் தெரிவிக்கப்பட்டது.

அடுத்தநாள் அவர் இறுதிநிகழ்வுகள் நடந்தேறின.

இந்நிலையில், அவருடைய மருத்துவச் செலவுத் தொகையைக் கட்ட இயலாமல் மதுசூதனன குடும்பத்தினர் தவித்தபோது அதிமுக தலைமை கண்டுகொள்ளவில்லை எனவும் சசிகலாதான் அந்தத் தொகையைக் கட்டி அவாது உடலை மீட்டார் என்றும் சமூகவலைதளங்களில் செய்தி பரவிவருகிறது.

அதில்….

அப்போலோ மருத்துவமனையில் ரூ 50 இலட்சம் கொடுத்து மதுசூதனன் உடலை வாங்கத் தயங்கிய குடும்பத்தார் மற்றும் நண்பர்கள், பின்வாங்கிய‌ இபிஎஸ், ஓபிஎஸ் மற்றும் அமைச்சர்கள், ஆனால் தியாகத்தலைவி
சின்னம்மா அவர்கள் மதுசூதனன் உடலை அப்போலோ மருத்துவமனையில் ரூ 50 இலட்சம் கட்டி அவரது உடலை அவரது குடும்பத்தினரிடம் ஒப்படைத்தார்.

இபிஎஸ், ஓபிஎஸ் யினரால் அதிமுக அவைத்லைவருக்கே இந்த நிலைமை என்றால் தொண்டர்களுக்கு???

ஓபிஎஸ் உடன் சேர்ந்து கர்மயுத்தம் நடத்தி அதன் பின் தன்னை கட்சியில் இருந்து நீக்கியவர் என்று கூட பாராமல், தன் கணவர் இறப்பிற்குக் கூட வராமல் இருந்தவருக்கு ஓடிப் போய் உதவி செய்வது தான் தலைமையின் மகத்துவமான சேவை.

மேன் மக்கள் மேன் மக்களே.
தியாகத்தலைவி சின்னம்மா.
இதை நாங்கள் சொல்லிக் காட்ட இல்லை எங்கள் தாயின் பெருந்தன்மையை ஒரு சிலர் புரிந்து கொள்ள வேண்டும் என்பதற்கே

இவ்வாறு பதிவுகள் வலம்வந்து கொண்டிருக்கின்றன.

Leave a Response