இன்று ஐந்து மாநிலங்களில் சட்டமன்றத் தேர்தல் நடக்கிறது – தமிழகத்தில் மட்டும் ஏன் இப்படி?

மேற்குவங்கத்தில் ஒரு வாக்குச்சாவடி

தமிழ்நாடு, கேரளா, அசாம், மேற்கு வங்காளம் மற்றும் புதுச்சேரியில் இன்று சட்டமன்றத் தேர்தல் நடைபெறுகிறது. இவற்றில் கேரளா, புதுச்சேரி மற்றும் தமிழகத்தில் ஒரே கட்டமாக இன்று தேர்தல் நடத்தப்படுகிறது. இதற்கான வாக்குப்பதிவு காலை 7 மணிக்கு தொடங்கியது.

கேரளாவில் மொத்தம் உள்ள 140 தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக இன்று தேர்தல் நடக்கிறது. அசாம் மற்றும் மேற்கு வங்காள மாநிலங்களில் இன்று 3- ஆம் கட்ட வாக்குப்பதிவு தொடங்கியுள்ளது. அசாம் மாநிலத்தில் இதுவரை இரண்டு கட்டங்களாக வாக்குப்பதிவு நடந்து முடிந்துள்ள நிலையில், இன்று 3 ஆவது மற்றும் கடைசி கட்ட வாக்குப்பதிவு நடக்கிறது. அங்கு இன்று தேர்தல் நடைபெறும் 40 தொகுதிகளில் 337 வாக்காளர்கள் களத்தில் உள்ளனர்.

அதே சமயம் மேற்கு வங்காளத்தில் 8 கட்டங்களாக வாக்குப்பதிவு நடத்தப்படும் நிலையில், இன்று 3 ஆம் கட்ட வாக்குப்பதிவு தொடங்கியுள்ளது. தெற்கு 24 பர்கானாக்கள், ஹவுரா, ஹூக்ளி ஆகிய 3 மாவட்டங்களுக்கு உட்பட்ட 31 தொகுதிகளில் இன்று வாக்குப்பதிவு நடைபெறுகிறது.

ஒரே நாளில் ஐந்து மாநிலங்களில் தேர்தல் நடக்கிற நிலையில், எல்லா மாநிலங்களிலும் மக்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து ஓட்டுப் போடும் புகைப்படங்களை சமூகவலைதளங்களில் பகிர்ந்துவருகிறது ஏஎனை செய்தி நிறுவனம்.

ஆனால் தமிழகத்தில் மட்டும் ரஜினிகாந்த், அஜீத் ,சூர்யா, கார்த்தி என நடிகர்கள் ஓட்டுப் போட்ட செய்தியே முதன்மையாக இருக்கிறது.

மற்ற மாநிலங்களில் நடிகர்களே இல்லையா? அவர்கள் ஓட்டுப்போடவில்லையா? தமிழகத்தில் மட்டும் ஏன்? அது பெரிய செய்தியாக்கப்படுகிறது?

இக்கேள்விகளுக்கு விடை சொல்வது யார்?

Leave a Response