விஜய்யும் அஜீத்தும் திமுகவுக்கு ஓட்டுப்போட்டார்களா? – குறியீடுகளால் ஏற்பட்ட பரபரப்பு

தமிழக சட்டமன்றத் தேர்தல் இன்று நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.

இத்தேர்தலில் நடிகர் நடிகைகள் வாக்களிப்பது பெரிய செய்தியாகச் சொல்லப்பட்டுவருகிறது.

அவற்றைத்தாண்டி, முன்னணி நடிகர்களான விஜய் மற்றும் அஜீத் ஆகியோர் திமுகவுக்கு வாக்களித்தார்கள் என்றும் தம் இரசிகர்களைத் திமுகவுக்கு ஓட்டுப்போடச் சொல்லும் குறியீடுகளோடு வந்தார்கள் என்றும் சொல்லப்படுகிறது.

வாக்களிக்க வந்த நடிகர் அஜீத் போட்டிருந்த முகக்கவசம் கறுப்பு வண்ணத்திலும் அதிலுள்ள காதில் மாட்டும் கயிறு சிவப்பு வணத்திலும் இருந்தது. உடனே அப்புகைப்படங்களைப் பகிர்ந்து,
உலகத்துல எவ்ளோ கலர்ல மாஸ்க் இருந்தாலும் கறுப்பு சிவப்பு கலர் மாஸ்க், அதுவும் ஓட்டுப் போட வரும் போது போட்டுற்காருனா.அப்ப திமுக ஆதரவுன்னுதானே அர்த்தம் என்று சொல்கிறார்கள்.

அடுத்து நடிகர் விஜய் ஓட்டுப்போட வரும்போது மிதிவண்டியில் வந்தார்.அவர் ஓட்டிவந்த மிதிவண்டியில் கறுப்பு சிவப்பு வண்ணம் இருந்தது.

இதனால், பெட்ரோல் விலை உயர்வைக் கண்டிக்கும் வகையில் மிதிவண்டியில் வந்ததாகவும், பெட்ரோல் விலை உயர்வில் இருந்து காக்க வந்த மிதிவண்டி திமுக கூட்டணி என்பதைக் குறிக்கும் வண்ணம் கறுப்பு சிவப்பு நிறத்தை தேர்ந்தெடுத்துள்ளார் என்றும் சொல்கிறார்கள்.

விஜய் மற்றும் அஜீத் ஆகியோரின் குறியீட்டால் உற்சாகமடைந்த அவர்களுடைய இரசிகர்கள் தமிழ்நாடு முழுவதும் சென்று திமுகவுக்கு வாக்களிக்கத் தயாராகி உள்ளதாகச் செய்திகள் வருகின்றன.

இதனால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

Leave a Response