விஸ்வரூபமெடுக்கும் இஸ்லாமிய கட்சி – அதிரும் ஆர் எஸ் எஸ்

ஐதராபாத் மாநகராட்சித் தேர்தலில் எந்தக் கட்சிக்கும் பெரும்பான்மை பலம் கிடைக்கவில்லை. தெலங்கானா மாநிலம், ஐதராபாத் மாநகராட்சித் தேர்தல் வாக்குப்பதிவு டிசம்பர் 1 ஆம் தேதி நடந்தது.

இதற்கு முன் எப்போதும் இல்லாத வகையில் இம்முறை இத்தேர்தலில் கடும் போட்டி நிலவியது. கடந்த முறை 4 இடங்களில் மட்டுமே வெற்றி பெற்றிருந்த பாசக, இம்முறை மேயர் பதவியைப் பிடிக்கும் முயற்சியில் தீவிரப் பரப்புரை செய்தது.

மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, உபி முதல்வர் யோகி ஆதித்யநாத் உள்ளிட்ட முக்கிய தலைவர்கள் பிரசாரம் செய்ததால் இத்தேர்தல் இந்திய அளவில் முக்கியத்துவம் பெற்றது.

இந்த மாநகராட்சியின் மொத்த இடங்கள் 150.டிசம்பர் 1 ஆம் தேதி நடந்த வாக்குப்பதிவில் 40 விழுக்காட்டுக்கும் குறைவான வாக்குகளே பதிவாகின. இதன் வாக்கு எண்ணிக்கை ேநற்று நடந்தது.

வாக்கு எண்ணிக்கையில் எந்தக் கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்கவில்லை. கடந்த முறை இந்த மாகராட்சியை ஆட்சி செய்த ஆளும் தெலங்கானா ராஷ்டிரிய சமிதி (டிஆர்எஸ்), இம்முறை 56 இடங்களை மட்டுமே பிடித்தது.

பாசக 49 இடங்களிலும், ஓவைசியின் ஏஐஎம்ஐஎம் கட்சி 43 இடங்களிலும், காங்கிரசு 2 இடங்களிலும் வெற்றி பெற்றன. பெரும்பான்மைக்கு தேவையான 76 இடங்களை எந்தக் கட்சியும் எட்டாததால் இழுபறி ஏற்பட்டுள்ளது.

ஆனாலும்,49 இடங்களைப் பிடித்து 2 ஆவது இடத்தை பாசக பிடித்திருப்பது, அக்கட்சிக்குப் புதுதெம்பைத் தந்துள்ளது.

அதேசமயம், பாசகவின் தீவிர இந்துத்துவா செயல்களின் எதிர்வினையாக இஸ்லாமியரான ஓவைசியின் ஏஐஎம்எம் கட்சி அதிரடியாக வளர்ந்து வருவது பாசக மற்றும் ஆர் எஸ் எஸ் காரர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.

Leave a Response