ஸ்டெர்லைட் ஆலை வழக்கு – சென்னை உயர்நீதிமன்றம் அதிரடித் தீர்ப்பு

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையில் இருந்து வெளியேறும் கழிவுகள் மற்றும் புகையால் சுற்றுவட்டாரத்தில் வசிக்கும் பொதுமக்களுக்கு பலதரப்பட்ட நோய்கள் பரவுவதாகக் குற்றச்சாட்டு எழுந்தது.

இதையடுத்து இந்த ஆலையை மூடக் கோரி பொதுமக்கள் தொடர் போராட்டம் நடத்தினர்.2018 மே 22 ஆம் தேதி நடந்த மக்கள் போராட்டத்தின்போது,காவல்துறையினர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 13 பேர் இறந்தனர்.

இதையடுத்து 2018 மே 28 அன்று அந்த ஆலைக்கு தமிழக அரசு சீல் வைத்தது. இதை எதிர்த்தும் ஆலையை திறக்கக்கோரியும் வேதாந்தா நிறுவனம் சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.

இவ்வழக்கில் இன்று தீர்ப்பளித்த சென்னை உயர்நீதிமன்றம், ஸ்டெர்லைட் ஆலையை மூடி தமிழக அரசு பிறப்பித்த உத்தரவு செல்லும் என்றும் ஆலையை மீண்டும் திறக்க வேதாந்தா நிறுவனத்துக்கு அனுமதி இல்லை என்று கூறி தமிழக அரசு உத்தரவை எதிர்த்து வேதாந்தா தாக்கல் செய்த வழக்கைத் தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.

சென்னை உயர்நீதிமன்றத்தின் இந்தத் தீர்ப்பைப் பலர் ஆதரித்து கருத்துச் சொல்லிவருகின்றனர்,

Leave a Response