பட்டாசு வெடிப்பதால் இவ்வளவு தீமைகள் – எச்சரிக்கும் சூழலியலாளர்கள்

பட்டாசு வெடிப்பதனால் மனிதனுக்கு ஏற்படும் தீமைகள் காரணமாக
பொதுநலன் கருதி பட்டாசு வெடிக்கத் தடை விதிக்க வேண்டும் என்று சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் கோரிக்கை வைக்கின்றனர்.

இது தொடர்பாக அவர்கள் கூறுவதாவது….

தீபாவளி பண்டிகை என்பது தீப ஒளிப் பண்டிகையே ஆகும்.

நமக்குள் இருக்கும் அசுர குணங்களும், கொடிய செயல்களும் முற்றிலும் நீங்கி கொண்டாடும் பண்டிகை நாளே தீபாவளி பண்டிகை எனும் தீப ஒளித் திருநாள் ஆகும் .

இதுவே மிகப்பெரிய அறிஞர்களின்,ஞானிகளின் கருத்துமாகும்

பட்டாசு வெடித்துக் கொண்டாடும் பண்டிகை அல்ல என்பதை நாம் நன்றாகப் புரிந்து கொள்ள வேண்டும்.

பட்டாசு வெடிப்பதனால் இயற்க்கைக்கும், மனிதனுக்கும் பல வழிகளிலும் தீமைகள் ஏற்படுகின்றன.

அத்தீமைகள் பெரிய அளவில் ஒரு தேசத்தையே பாதிக்கின்றது.

மலைகள், காடுகள் மற்றும் புல்வெளிகள் உள்ளிட்ட இயற்கை சுற்றுச்சூழல்கள்,வெடிபொருட்கள் மூலம் வெளியேறும் கரும்புகையால் மாசுபடுவதுடன் வெப்பமும் அதிகரித்து விடுகின்றது

தீபாவளி அன்று சாலைகளில் கடும் உற்சாகத்துடன் பட்டாசுகளை வெடிப்பதால், வாகன ஒட்டிகளுக்கும், பொதுமக்களுக்கும் பல்வேறான இன்னல்கள் ஏற்படுகின்றன.

பட்டாசு வெடிப்பதால் காயம் அடைவோரில் 50 சதம் பேர் குழந்தைகளே. ஆகையால் நாம் பட்டாசு வெடிப்பதை உடனே கைவிட வேண்டும்.

இயற்கையை சிதைக்காமல் அழிக்காமல் நாம் தீபாவளி கொண்டாட பல வழிகள் உலகில் உள்ளன.

பட்டாசில் இருந்து எழும் சத்தத்தால் காது செவிடாவதைப் போல அதில் இருந்து வெளியாகும் புகையால் கண், தொண்டை, மூக்கு போன்றவற்றில் பல்வேறு பிரச்சினைகள் ஏற்படும்.

பட்டாசு புகையின் தாக்கம் உடனே தெரியாது.4,5 நாள் கழித்துதான் அந்த தாக்கத்தை நாம் உணர முடியும்.

உலக நாடுகள் அனைத்திற்குமே சுற்றுச் சூழல் பாதுகாப்பு என்பது ஒரு சவாலான பணியாக இருந்தாலும் வெளிநாடுகள் இதை வெற்றிகரமாக சமாளித்து விடுகின்றன.

இந்தியாவால் இதை சமாளிக்க முடியும் என்றாலும் ஒரு போதும் முயற்சிப்பதில்லை.இந்தியாவில் 10-ல் ஒருவருக்கு காது கேளாமை கோளாறு உள்ளதாக சமீபத்திய ஆய்வு ஒன்று தெரிவிக்கிறது.

தீபாவளி சமயங்களில் அதிக சத்தத்துடன் கூடிய பட்டாசுகளை வெடிக்கும்போது காது கேளாமை கோளாறு மேலும் அதிகமாகும்.

காது செவிடான பிறகு மருத்துவ சிகிச்சை மூலம் குணப்படுத்த முடியாது. இதற்கு தனியாக சிகிச்சை என்று எதுவும் கிடையாது.
காது கேட்கும் மிஷின் பொருத்தினாலும் துல்லியமாக கேட்காது.

பட்டாசில் இருந்து எழும் சத்தத்தால் காது செவிடாவதைப் போல அதில் இருந்து வெளியாகும் புகையால் கண், தொண்டை, மூக்கு போன்றவற்றில் பல்வேறு பிரச்சினைகள் ஏற்படும்.

முதலில் இவை தலைவலியை கடுமையாக உண்டாக்கும் மூளையின் செயல்பாடுகளிலும் பாதிப்பை ஏற்படுத்தும்.

இதயநோயாளிகள், நுரையீரல் கோளாறு உள்ளவர்கள் இப்புகையால் கடுமையான பாதிப்புக்கு உள்ளாகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இதில் உள்ள வேதியியல் பொருள்கள் விளைவிக்கும் பல்வேறான தீங்குகள்:

தாமிரம் சுவாசக்குழாய் எரிச்சல்

கேட்மியம் இரத்த சோகை மற்றும் சிறுநீரக பாதிப்பு

ஈயம் நரம்பு மண்டலத்தை பாதிக்கும்

மெக்னிஷியம் தூசி மற்றும் புகைகள் உலோக FUME காய்ச்சலை ஏற்படுத்தும்

சோடியம் தோல்வியாதி

துத்தநாகம் வாந்தி ஏற்படும்

நைட்ரேட் மன அமைதி பாதிக்கப்படும்

நைட்ரைட் புத்தி பேதலித்து கோமா ஏற்படும்

பட்டாசு வெடிக்காமல் தீபாவளி கொண்டாட பல வழிகள் உலகில் நம்மிடம் இருக்கையில், நமக்கு வரப்பிரசாதமாக இறைவன் கொடுத்த இயற்கையை கெடுத்துத்தான் தீபாவளி கொண்டாட வேண்டுமா ?

பட்டாசு வெடித்துத்தான் கொண்டாட வேண்டுமா ?

இதுபற்றி என்றாவது நாம் கொஞ்சம் யோசித்தது உண்டா?

இயற்கையை மட்டுமே வாழ்வாதாரமாக கொண்ட மனிதா்களே.ஒரு நிமிடம் சிந்திப்போம்.

– பி.எஸ்.கே.செல்வராஜ்

Leave a Response