பிக்பாஸ் லாஸ்லியாவுக்கு எச்சரிக்கை

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் பிக்பாஸ் 3 நிகழ்ச்சியில் ஈழத்தமிழ்ப் பெண்ணான லாஸ்லியா கலந்து கொண்டிருக்கிறார். அந்த நிகழ்ச்சியில், லாஸ்லியா தற்போது கவினைக் காதலிக்கிறார் என்று சொல்லப்படுகிறது.

இதனால் அவருக்கு எதிர்ப்புகள் வந்துள்ளன.

அன்புத்தங்கை லொஸ்லியா நீங்க என்ன நோக்கத்திற்காக பிக்பாஸ் நிகழ்ச்சிக்குள் காலடி வைச்சிங்க என்பதை மறந்து அலைபாய்ந்து கொண்டிருக்கின்றீர்கள்.

அது எம் இலங்கை வாழ் தமிழ் மக்களையும் மற்றும் இளைஞர்களையும் மிகவும் வெறுப்படையச் செய்து வருகின்றது தயவுசெய்து உங்களின் உண்மை முகத்தைக் காண்பித்து எமது ஊடகங்களுக்கும் எம் மக்களுக்கும் பெருமை சேர்த்து மீண்டும்
இலங்கை மண்ணில் கால் பதிக்கவும்.

அப்படி இல்லன்னா காதோள் கீதோள் என்று
விழுந்திட்டு அவமானப்பட்டு அசிங்கபட்டு வாறதா இருந்தா எம் நாட்டுக்குள் கால் பதிக்க வேண்டாம் அப்பிடியே தாய்லாந்து சீனா பக்கம் போய்சேருங்க.

இவ்வாறு ஈழ்த்தமிழர்கள் கூறிவருகிறார்கள்.

அங்கு நடப்பதெல்லாம்,திரைக்கதை எழுதி எடுக்கப்படுகிற நிகழ்ச்சி என்பது தெரியாமல், உண்மை என்று நம்பி இவ்வாறு பேசிக்கொண்டிருப்பவர்களைப் பார்த்து பரிதாபப்படத்தான் வேண்டும்.

– அன்பன்

Leave a Response