2019 நாடாளுமன்றத் தேர்தலுக்குப் பின் தமிழக ஆட்சியாளர்கள் மத்தியில் அசாதாரண சூழல் நிலவுகிறது. ஆளுநர் பன்வாரிலால் புரோகித் டெல்லிக்கு அழைக்கப்பட்டிருக்கிறார்.
இரண்டு நாட்களாக அங்கிருக்கும் அவர், உள்துறை அமைச்சர் அமித்ஷாவையும், குடியரசுத்தலைவர் ராம்நாத் கோவிந்த்தையும் சந்தித்துப் பேசியுள்ளார். இதையடுத்து பிரதமர் மோடியையும் அவர் சந்தித்துப் பேசத் திட்டமிட்டுள்ளார். இவை அனைத்தும் மரியாதை நிமித்தம் என்று கூறப்பட்டாலும், தமிழகத்தில் உள்ள அரசியல் நிலவரம் குறித்துதான் அதிகம் பேசப்பட்டதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
இந்நிலையில், இன்று சென்னையில் அதிமுகவின் மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் நடைபெற உள்ளது. இந்நிலையில் அக்கட்சியின் முக்கிய அமைச்சர்களான தங்கமணி மற்றும் வேலுமணி ஆகியோர் நேற்று முன்தினம் திடீரென டெல்லி சென்றனர்.
அவர்கள், மத்திய ரயில்வே துறை அமைச்சரும், தமிழக பாஜ பொறுப்பாளருமான பியூஷ் கோயலைச் சந்தித்துப் பேசியுள்ளனர். இதில் மாநில வளர்ச்சி திட்டங்களுக்கான நிலுவை நிதியைக் கேட்டதாக அமைச்சர்கள் தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டது. ஆனால், முழுக்க முழுக்க அரசியல் பேசப்பட்டதாக கூறப்படுகிறது.
இமுக,
நடந்து முடிந்த மக்களவைத் தேர்தலில் பாஜ தோல்விக்கும், அதிமுகவிற்கும் எந்தவித சம்பந்தமும் கிடையாது. இதுகுறித்து மாநில சட்டத்துறை அமைச்சர் சி.வி.சண்முகம் தெரிவித்தது கூட அவரது சொந்த கருத்து. கட்சி தலைமைக்கும் அதற்கும் எந்தவித சம்பந்தமும் கிடையாது. மேலும் அதிமுகவைப் பொறுத்தமட்டில் துணை முதல்வராக இருக்கக்கூடிய ஓ.பன்னீர்செல்வம் கட்சிக்குள் பல்வேறு குழப்பங்களைச் செய்து வருகிறார்.
வரும் புதன்கிழமை (இன்று) முதல்வர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் நடைபெற இருக்கும் மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தின் போது கட்சி சார்பாக பல்வேறு முக்கிய முடிவுகள் எடுக்கப்பட உள்ளது என்பது உட்பட பல்வேறு விஷயங்களை ஆலோசித்துள்ளனர். இவை அனைத்தையும் கேட்ட மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் எந்த பதிலும் கூறாமல் அனுப்பி வைத்ததாக டெல்லி பாஜ வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
பிறகு, அமைச்சர்கள் வேலுமணி மற்றும் தங்கமணி ஆகிய இருவரும் நேற்று பிற்பகல் சுமார் 1.30 மணிக்கு மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை அவரது அலுவலகத்தில் நேரில் சந்தித்து ஆலோசனை நடத்தியுள்ளனர். சுமார் அரை மணி நேரம் நடந்த இந்தச் சந்திப்பின் போது தமிழக அரசியல் நிலவரங்கள் மற்றும் அதிமுக உட்கட்சிப் பூசல் ஆகியவை குறித்து ஆலோசிக்கப்பட்டதாகத் தெரிகிறது.
தமிழகத்தில் அதிமுகவின் எதிரகாலத்தை அக்கட்சிக்குச் சிறுதும் சம்பந்தமில்லாத டெல்லி ஆட்கள் தீர்மானிக்கக் கூடிய பரிதாபகரமான நிலை ஏற்பட்டுள்ளது என்று அதிமுகவின் நீண்டகாலத் தொண்டர்கள் வருந்துகின்றனர்.