2019 நாடாளுமன்றத் தேர்தல் – தமிழகத்தில் திமுக கூட்டணி கட்சிகளுக்கான தொகுதிப்பங்கீடு நிறைவு பெற்றுள்ளது.
இதை திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் இன்று (மார்ச் 5,2019) செய்தியாளர்களிடம் கூறியதாவது….
திமுக கூட்டணி கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள் என ஒதுக்கீடு பணிகள் நிறைவு பெற்றது.
காங்கிரசு – 10, மதிமுக – 1 மக்களவை, 1 மாநிலங்களவை, விடுதலைச் சிறுத்தைகள் கட்சி – 2, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு – 2, இந்திய கம்யூனிஸ்டு – 2, இந்திய யூனியன் முஸ்லீம் லீக் – 1, கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி -1, ஐஜேகே – 1 என தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளது.
மக்களவைத் தேர்தலில் கூட்டணி கட்சிகள் 20 தொகுதிகளிலும், தி.மு.க. 20 தொகுதிகளிலும் போட்டியிடும் சூழ்நிலை உருவாகி உள்ளது. மனிதநேய மக்கள் கட்சிக்கு தொகுதி ஒதுக்கீடு செய்ய வாய்ப்பில்லை.
எந்தெந்த தொகுதிகள் கூட்டணி கட்சிகளுக்கு ஒதுக்கீடு செய்யப்படும் என்பது குறித்து நாளை மறுநாள் முதல் ஆலோசிக்கப்படும்.
இவ்வாறு மு.க.ஸ்டாலின் கூறினார்.
திமுக கூட்டணியில் தொகுதி ஒதுக்கீடு நிறைவடைந்துள்ளது. அதேசமயம் அதிமுக கூட்டணியில் இன்னும் தொகுதி ஒதுக்கிடு முழுமையடையாமல் இழுபறி நீடிக்கிறது.