தனிஒருவனாகப் போராடிய கோலி – 2 ஆவது போட்டியிலும் வென்றது இந்தியா

ஆஸ்திரேலிய மட்டைப்பந்தாட்ட அணிக்கு எதிரான 2 ஆவது ஒருநாள் போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்றுள்ளது.

முதலில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணியின் தலைவர் ஆரோன் பிஞ்ச் பந்துவீச்சைத் தேர்வு செய்தார். இதனையடுத்து முதலில் களமிறங்கிய இந்திய அணி 48.2 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 250 ரன்களை மட்டும் எடுத்தது.

ரோகித் ரன் எதுவும் எடுக்காமல் ஆட்டமிழந்தார். தவான் 21 ரன்கள் எடுத்தார். ராயுடு 18 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார். விஜய் ஷங்கர் 46 ரன்கள் எடுத்து வெளியேறினார். அதனை அடுத்து சுழற்பந்துவீச்சாளர் ஜாம்பாவின் ஒரே ஓவரில் ஜாதவ் 11 ரன்களிலும், தோனி ரன் எடுக்காமலும் ஆட்டமிழந்தார்கள்.

பின்னர் களம் இறங்கிய ஜடேஜாவுடன் இணைந்த விராட்கோலி ஒரு நாள் அரங்கில் 40 ஆவது சதத்தை அடித்தார். பின்னர் ஜடேஜா 21 ஆட்டமிழந்து வெளியேறினார். விரட்கோலி 116 ரன்களில் ஆட்டமிழந்தார். அதனை அடுத்து குல்தீப் 3, பும்ரா 0 அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர். இதனையடுத்து இந்திய அணி 48.2 ஓவரில் 250 ரன்களில் ஆட்டமிழந்தது.

ஆஸ்திரேலியா சார்பில் அதிகபட்சமாக கம்மின்ஸ் 4 விக்கெட் வீழ்த்தினார். இந்நிலையில் 251 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஆஸ்திரேலிய அணி களமிறங்கியது.

ஆட்ட முடிவில் ஆஸ்திரேலிய அணி 49.3 ஓவரில் அனைத்து விக்கெட்களையும் இழந்து 242 ரன்கள் எடுத்து 8 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது.

5 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் 5-2 என்ற கணக்கில் இந்திய அணி முன்னிலை வகிக்கிறது.

Leave a Response