வென்றால் தமிழ்நாடு தோற்றால் வெளிநாடு – விஜய் முடிவால் பரபரப்பு

தமிழ்​நாட்​டில் 234 சட்​டப்​பேர​வைத் தொகு​தி​களுக்​கான வாக்​குப்​ப​திவு ஏப்ரல் 23 ஆம் தேதி நடை​பெற்​றது. இதையொட்​டி, கடந்த ஒரு மாத​கால​மாக அரசி​யல்கட்​சித் தலை​வர்​கள் தீவிர வாக்குச் சேகரிப்​பில் ஈடு​பட்டு
வந்​தனர்.

தேர்​தல் முடிந்​துள்ள நிலை​யில், தற்​போது அவர்​கள் இளைப்பாறிக் கொள்​வதற்​காக சுற்​றுலாத் தலங்​களுக்​குச் சென்று வரு​கிறார்​கள்.முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கொடைக்கானல் சென்றுள்ளார்.உதயநிதி துபாய் சென்றுள்ளார்.

அந்த வகையில்,நடிகரும் தவெக தலை​வருமான விஜய்​, ஆஸ்​திரேலியா செல்​லத் திட்​ட​மிட்​டுள்​ள​தாகத் தகவல் வெளி​யாகியுள்ளது. இந்தத் தகவல் பெரும் பரபரப்பை ஏற்​படுத்​தி​யுள்​ளது.இதில் பரபரப்புக்கு என்ன இருக்கிறது?

அவர் பயணம் செய்யத் திட்டமிட்டிருக்கும் நாள்தான் பரபரப்புக்குக் காரணமாக இருக்கிறதென்கிறார்கல்.

அவர்,மே 4 ஆம் தேதி ஆஸ்திரேலியப் பயணம் மேற்கொள்ளவிருக்கிறார் என்று அதிகாரப்பூர்வமற்ற முறையில் சொல்லப்படுகிறது. அன்​றைய தினம்​தான் தமிழ்நாடு சட்​டப்​பேர​வைத் தேர்​தல் முடிவு​கள் வெளி​யாக இருக்கின்றன என்பதால் தான் பரபரப்பு..

இதுகுறித்​து,நடிகர் விஜய் கட்சியான தவெக வட்​டாரங்​கள் கூறிய​தாவது….

பொது​வாக, விஜய் தனது படங்​களின் படப்​பிடிப்பு முடிந்த பிறகு, வெளி​நாட்​டுப் பயணம் மேற்​கொள்​வதை
வழக்​க​மாக வைத்​திருந்​தார்.

தற்​போது, தேர்​தல் பணி​கள் முடிவடைந்​துள்ள நிலை​யில், அவர் வெளி​நாடு செல்​லத் திட்​ட​மிட்​டுள்​ளார். அதன்​படி, தேர்​தல் முடிவு​கள் வெளி​யாக​வுள்ள 4 ஆம் தேதி அவர் ஆஸ்​திரேலியா செல்​லக்கூடும் என்று கூறப்​படு​கிறது.
இதற்​காக, அவர் முன்​ப​திவு செய்​திருப்​ப​தாக​வும் சொல்​லப்​படு​கிறது.

இருப்​பினும், தேர்​தலில் வெற்றி பெற்று நாங்​கள்​தான் ஆட்சி அமைப்​போம் என்​கிற அசைக்க முடி​யாத நம்​பிக்கை இருக்​கிறது. எனவே, அன்​றைய தினம் முடிவு​கள் எங்​களுக்​குச் சாதக​மாக இருந்​தால், தலை​வர் வெளி​நாடு
செல்​லும் முடிவைக் கைவிட்​டு​விடு​வார்.

இவ்​வாறு அவர்​கள் தெரி​வித்​தனர்.

இதனால்,வென்றால் தமிழ்நாடு தோற்றால் வெளிநாடு என்கிற பரப்புரை உறுதி செய்யப்பட்டிருக்கிறதென விமர்சனங்கள் வந்து கொண்டிருக்கின்றன.

Leave a Response