சத்யபாமா எம்.பியின் தொடர் முயற்சி – தொடங்கின நெடுஞ்சாலைத்துறை பணிகள்

எம்.பி., சத்தியபாமாவின் தொடர் முயற்சியால் சம்மந்தப்பட்ட மத்திய நெடுஞ்சாலை துறை அமைச்சகம் மற்றும் நெடுஞ்சாலை துறை அதிகாரிகளிடமும், மத்திய நெடுஞ்சாலை துறை அமைச்சர் மாண்புமிகு நித்தின் கட்கரி அவர்களிடம் நேரில் வலியுறுத்தியும் கோரிக்கை வைக்கப்பட்டது.

திருப்பூர் எம்.பி. சத்தியபாமா கடிதத்தில் கூறியதாவது….

திருப்பூர் நாடாளுமன்ற தொகுதிக்குட்பட்ட இந்திய தேசிய நெடுஞ்சாலை அதிகார அமைப்பின் கீழ் உள்ள, லஷ்மி நகர் (பவானி) முதல் முதல் செங்கப்பள்ளி வரை 43 கி.மீல் 300 க்கும் மேலான மிகமோசமான சாலை விபத்துக்கள் நடந்துள்ளன.

இந்தப்பகுதியில் விபத்துகளைத் தடுக்க வேண்டுமெனில், NHAI- 47 இல் கீழ்க் கண்ட இணைப்பு சாலை மற்றும் மேம்பாலங்கள் அத்தியாவசியம் என்று திருப்பூர் எம்.பி சத்தியபாமா,பாராளுமன்றத்தில் பேசியதோடு, மத்திய நெடுஞ்சாலை துறை அமைச்சரை நேரில் சந்தித்தும் கடிதம் அளித்தார்.

அந்தக் கடிதத்தில்…

(1) பெருந்துறை – காஞ்சிக்கோவில் – கோவிந்தப்பாடி குறுக்குச் சாலையில் 78/400 கிலோமீட்டரில் ஒரு மேம்பாலம்

(2) பெருந்துறை – துடுப்பதி – மாக்கினம் கோம்பை குறுக்குச் சாலையில் 80/800 கிலோமீட்டரில் ஒரு மேம்பாலம்

(3) கொளத்துப்பாளையம் – விஜயமங்கலம் குறுக்குச் சாலையில் 89/100 கிலோமீட்டரில் ஒரு சாலை மேம்பாலம்

மற்றும், (4) பெருந்துறை – பெத்தம்பாளையம் – காஞ்சிக்கோவில் குறுக்குச் சாலையில் 79/400 கிலோமீட்டரில் ஒரு மேம்பாலம்.

மேற்குறிப்பிட்ட இடங்களில் ஏழை மற்றும் விவசாயக் குடும்பங்களைப் பாதுகாக்கும் வகையில் மேம்பாலங்களை உடனடியாகக் கட்டித்தர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அமைச்சரை வலியுறுத்தினார்,

அதுமட்டுமின்றி, மிகவும் முக்கிய பிரச்சனையாக தற்போது இருக்கக்கூடியது விஜயமங்கலம் சுங்கச்சாவடி 88/100 பகுதிதான். ஏனெனில் இரு பக்கங்களிலும் சுங்கச்சாவடி செயல்பட்டு வருவதால் அதன் குறுக்கே பொதுமக்கள் கடந்து செல்வதற்காக வாகன பாதை எதுவும் அமைக்கப்படாமல் அதன் கட்டமைப்பு உள்ளது. அதனால் இரு சக்கரம் மற்றும் அத்தியாவசிய வாகனங்கள் செல்வதை கருத்தில் கொண்டு விஜயமங்கலம் பகுதி சுங்கச்சாவடியின் குறுக்கே பொதுமக்களின் நலனை கருத்தில் கொண்டு சுரங்கப்பாதை அமைத்து விரைவில் செயல்படுத்திட வேண்டும் எனவும் திருப்பூர் எம்.பி சத்தியபாமா 06.06.2018 அன்று கோரிக்கை மனு கொடுத்து வலியுறுத்தினார்.

திருப்பூர் எம்.பி. சத்தியபாமா மேற்கொண்ட தொடர்ச்சியான முயற்சிகளின் பலனாக, மத்திய நெடுஞ்சாலைத் துறை அமைச்சகம், புதுடெல்லி உடனடியாக நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியதின் பேரில் ‘தேசிய நெடுஞ்சாலைத் துறை’ (NHAI), கி.மி 78/400 பெருந்துறை – காஞ்சிக்கோவில் – கோவிந்தப்பாடி, கி.மி 89/100 கொளத்துப்பாளையம் – விஜயமங்கலம் , கி.மி 80/800 பெருந்துறை – துடுப்பதி, மாக்கினம் கோம்பை ஆகிய இடங்களில் தரைப்பாலம் அமைக்கவும் (Vehicular Under Pass) கி.மி 79/400 பெருந்துறை – பெத்தம்பாளையம் – காஞ்சிக்கோவில் மற்றும் கி.மி 88/100 ஆகிய இடங்களுக்கு இணைப்பு சாலைகள் (Service Roads) தற்போது NHAI விரிவாக்கம் 6/8 சாலைகள் திட்டக் குழுத் தலைவர் திருவாளர்கள் K & J புராஜேக்ட்ஸ் அவர்களுக்கு திட்டப் பணிகளுக்கான அறிக்கைகள் சமர்ப்பிக்க உத்தரவு வழங்கப்பட்டுள்ளது.

தொகுதி மக்கள் நலனுக்காக சத்யபாமா வின் தொடர் முயற்சிகளே இதைச் சாத்தியமாக்கியுள்ளது. திட்டப்பணி அறிக்கை சமர்ப்பிக்கப் பிறப்பிக்கப்பட்டுள்ள உத்தரவு என்பது நல்ல முன்னேற்றம், அந்த அறிக்கை வந்ததும் பணிகள் தொடங்கும் என்றும் அரசுத் தரப்பில் கூறப்படுகிறது.

இதனால் சத்யபாமாவை தொகுதி மக்கள் பாராட்டி வருகின்றனர்.

Leave a Response