இந்திய பொதுவுடைமைக் கட்சியின் தமிழக செயலாளராக முத்தரசன் தேர்வு – முதலமைச்சர் வாழ்த்து

இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மாநில மாநாடு திருப்பூரில் ஆகஸ்ட் 6 ஆம் தேதி தொடங்கி நேற்று நிறைவடைந்தது.

மாநில மாநாட்டில் கட்சியின் தமிழ்நாடு செயலாளராக முத்தரசன் மீண்டும் தேர்வு செய்யப்பட்டார். அவர் தொடர்ந்து 3 ஆவது முறையாக மாநிலச் செயலாளராகத் தேர்வு செய்யப்பட்டுள்ளார். கட்சியின் கட்டுப்பாட்டுக்குழுத் தலைவராக பாராளுமன்ற உறுப்பினர் திருப்பூர் சுப்பராயன் தேர்வு செய்யப்பட்டார்.

மூன்றாவது முறையாக இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளராகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள முத்தரசனுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

அவருடைய பதிவில்….

மூன்றாவது முறையாக இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளராகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள அன்புத்தோழர் முத்தரசன் அவர்களுக்கு வாழ்த்துகள்!
சமத்துவத்தை நோக்கிய பொதுவுடைமைப் பாதையில் நமது இலட்சியத்தை நோக்கி தொடர்ந்து பீடுநடை போட வாழ்த்துகிறேன்

இவ்வாறு அவர் பதிவிட்டுள்ளார்.

Leave a Response