கொளத்தூர்மணி தியாகு குற்றச்சாட்டுக்கு உடுமலை கெளசல்யா விளக்கம்

உடுமலைப்பேட்டை கெளசல்யா, சாதி ஆணவக்கொலைச் செயலால் தன் காதல் கணவரைப் பறிகொடுத்தார். அதன்பின் சமுதாயப்போராளியாகச் செயல்பட்டுவந்தார். அவர், அண்மையில் சக்தி என்பவரை இரண்டாவதாகத் திருமணம் செய்து கொண்டார்.

அந்த சக்தி மீது நிறையக் குற்றச்சாட்டுகள் வந்தன. அது குறித்து கொளத்தூர்மணி, தியாகு ஆகியோர் விசாரணை நடத்தினர். அதன்பின் அவர்கள் இருவரும் நீண்ட அறிக்கையொன்றை வெளியிட்டனர்.

அதில் சக்தி மீதும் கெளசல்யா மீதும் குற்றச்சாடுகள் வைக்கப்பட்டிருந்தன.

அதற்கு விளக்கமளிக்கும் விதமாக கெளசல்யா வெளியிட்டுள்ள பதிவில்….

அனைவருக்கும் வணக்கம்!

தோழர் தியாகு, தோழர் கொளத்தூர் மணி ஆகியோரின் அறிக்கையில் என் மீது சொல்லப்பட்ட பிழையை மட்டுமே நான் ஏற்கிறேன். மற்ற அவதூறுகளை மறுக்கிறேன்.

6 மாத கருக்கலைப்பு என்பதும் அதற்கு நான்தான் காரணம் என்பதும் ஏற்றுக் கொள்ள முடியாத விடயம். அதில் உண்மையும் இல்லை. இது தலைவர்களுக்கு நன்கு தெரியும்.

என்னுடைய பிழை என்பது சக்திக்கு முன்பு சில காதல்கள் இருந்திருக்கிறது சில போக்குகள் இருந்திருக்கிறது தெரிந்தே நான் விரும்பியதும் திருமணம் செய்து கொண்டதும் மட்டும்தான். இந்த அடிப்படையில் நான் செய்த பிழை என்று அறிக்கையில் கூறியிருப்பதை ஏற்றுக் கொள்கிறேன்.

நானும் சக்தியும் கருக்கலைப்புக்கு பொறுப்பு அல்ல என்பதை மீண்டும் அழுத்தமாகக் குறிப்பிட விரும்புகிறேன். இவ்விளக்கம் இல்லாமல் அறிக்கையை பகிர்ந்தால் பல அவதூறுகளை ஏற்றுக்கொள்வது போல் ஆகிவிடும் என்பதாலேயே இந்த விளக்கம். இந்த அடிப்படையில் அறிக்கையை வெளியிடுகிறேன்.

குறிப்பு: நான் சாவிலிருந்து மீண்டவள். யாருமே இல்லாத தனியொருத்தி என ஆனாலும் புதிய பிறப்பு போல் மீண்டும் முதலில் இருந்து சாதி ஒழிப்பு பணிகளைத் தொடங்குவேன். சாதி வெறியர்களுக்கும் சாதிக் கொலைகளுக்கும் ஆணவக் கொலைகளுக்கும் எதிரான களத்தில் என்றும் நிற்பேன். சங்கருக்குரிய நீதி சாதி ஒழிப்புதான்! சாகும் வரைக்கும் சாதி ஒழிப்புக் களத்தில் நிற்பேன். இன்னும் இன்னும் மூர்க்கமாய் உழைப்பேன். என் மீது இன்றும் அக்கறையும் அன்பும் கொண்டுள்ள நண்பர்களுக்கு என் நன்றி! மாறுபாடும் வெறுப்பும் கொண்டுள்ள நண்பர்களுக்கும் அதே அன்பைத் தேக்கியே வைத்திருப்பேன். நன்றி!

கௌசல்யா
31/12/2018

முன்னதாக கொளத்தூர் மணி, தியாகு ஆகியோர் வெளியிட்ட கூட்டறிக்கையை முழுமையாகப் படிக்க…

உடுமலை கெளசல்யாவின் இரண்டாவது திருமணத்திலும் இவ்வளவு சிக்கலா?

Leave a Response