ஓட்டுக்கு நோட்டு நாட்டுக்கு வேட்டு – சீமான் சீற்றம்

சிவகங்கை மாவட்​டம் காரைக்​குடி தொகு​தி​யில் நாம் தமிழர் கட்சி வேட்​பாள​ராக அக்கட்​சி​யின் ஒருங்​கிணைப்​பாளர் சீமான் போட்​டி​யிடு​கி​றார். காரைக்​குடி புதிய பேருந்து நிலை​யம், ஐந்​து​விளக்​கு, பழைய பேருந்து நிலை​யம்
உள்​ளிட்ட இடங்​களில் சீமான் பரப்புரை செய்​தார்.பரப்புரையின் இறு​தி​நாளான நேற்று, தனது தொகு​திக்கு உட்​பட்ட செக்​காலை ரோடு என்ற இடத்​தில் பரப்புரையை அவர் நிறைவு செய்​தார்.

அந்தக் கூட்​டத்​தில் சீமான் பேசி​ய​தாவது…..

மக்​களில் 95 விழுக்காட்டினர் ஏழை, நடுத்தர வர்க்​கத்​தினர். செல்​வந்​தர்​கள் ஐந்து விழுக்காடு​தான் உள்​ளனர்.
செல்​வந்​தர்​கள்​தான் இன்​றைய நிலை​யில் பணத்தை வாரி இறைத்து ஆட்​சி​யைப் பிடிக்​கி​றார்​கள்.ஐந்து விழுக்காடே உள்ள செல்​வந்​தர்​களே ஆட்சி அமைக்க முடி​யும் என்ற நிலையை மாற்றவேண்​டும்.செல்​வந்​தர்​கள்,முதலா​ளி​கள் மட்​டுமே அதி​காரத்​துக்கு வரமுடி​யும் என்​றால் அது ஜனநாயகம் இல்​லை.ஓட்​டுக்கு நோட்​டு;அது நாட்​டுக்கு வேட்​டு.

தேர்​தல் நேரத்​தில் மட்​டும் அதி​முக, திமுக​வுக்கு மக்​கள் மேல் பாசம் வரு​கிறது. இருகட்​சிகளும் போட்​டி​போட்டு இலவசங்​களை அறி​வித்​துள்​ளன. பெண்​களைக் குறி வைத்து திமுக, அதி​முக ரூ.2,000 பணம் தரு​வோம் என்று அறி​வித்​தால், என் தம்பி விஜய் ரூ.2,500 தரு​வோம் என்று அறிவிக்​கி​றார். விஜய் தனது மனை​விக்கு மகளிர் உரிமைத் தொகை ரூ.2,500 கொடுப்​பா​ரா? ரூ.8,000 கூப்​பன் கனி​மொழி, துர்கா ஸ்டாலினுக்குக் கொடுக்​கப்​படு​மா?

இலவசத்​துக்​கான பணத்தை எங்​கிருந்து எடுத்​துக் கொடுப்​பீர்​கள். நாட்​டைத்​தான் அடமானம் வைக்கவேண்​டும்.
தமி​ழ்நாட்டில் வேலை இல்​லை; உழைப்பு இல்​லை; வரு​வாய் இல்​லை; ஆனால், இலவசம் மட்​டும் இருக்​கிறது. இலவசங்​களால் பொருளா​தா​ரம் சிதைந்து நாடு சீரழிந்து போகும். மேலும் பெரும் கலவரத்​தைச் சந்​திக்​கும்
சூழ்​நிலை ஏற்​படும்.

இலங்​கை, நேபாளம், வங்​கதேசம் போன்று எதிர்​காலத்​தில் தமி​ழ்நாடு பெரியபுரட்​சி​யைச் சந்​திக்​கும்.அதற்கு நான் தலைமை தாங்​கு​வேன்.குடும்ப அட்​டைக்கு ரூ.2,000 கொடுத்​து​விட்​டு, ரூ.2 இலட்​சம் கடனை நம் மீது
திணிக்​கின்​ற​னர். நாங்​கள் மக்​கள் நலனுக்​காகக் களத்​தில் நிற்​கி​றோம்.எங்​களுக்கு வாக்​களிப்​போர் வாக்​காளர்​கள் அல்ல;புத்​தம் புதிய அரசி​யலைக் கண்ட புரட்​சி​யாளர்​கள்.உங்​களை ஏமாற்ற வேண்​டும் எண்​ணம் எங்​களுக்கு
இல்​லை.

இவ்​வாறு அவர் பேசி​னார்​.

Leave a Response