பாஜக கூட்டணியில் கமல் ரஜினியை சேர்க்கத் தயார் – மோடி அறிவிப்பு

மிக நீண்ட இடைவெளிக்குப் பிறகு பிரதமர் நரேந்திர மோடி ஒரு தனியார் செய்தி நிறுவனத்துக்கு சிறப்புப் பேட்டி அளித்துள்ளார்.

பல்வேறு விசயங்கள் பற்றிப் பேசியுள்ள அந்தப்பேட்டியில், தென்னிந்தியாவில் கால் பதிக்கும் வகையில், நடிகர்கள் ரஜினிகாந்த், கமல்ஹாசன் ஆகியோரை பா.ஜனதா தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் சேர்க்கும் திட்டம் உள்ளதா? என்று கேட்கப்பட்டது.

அதற்கு மோடி கூறியதாவது…

எங்கள் அடித்தளத்தை விரிவுபடுத்த தொடர்ந்து பாடுபட்டு வருகிறோம். எங்களுடன் வர விரும்பும் ஒவ்வொருவரையும் அரவணைத்துச் சேர்த்துக் கொள்ளத் தயாராக இருக்கிறோம். இது, பிராந்திய உணர்வுகளை வலுப்படுத்தும் எங்கள் நோக்கத்துடன் தொடர்புடையது.

2014 ஆம் ஆண்டில் இருந்தே நிறையக் கட்சிகளை தேசிய ஜனநாயக கூட்டணியில் சேர்க்கும் முயற்சி நடந்து வருகிறது. அதன்படி, வடகிழக்கு மாநிலங்களில் சில கட்சிகள் சேர்ந்துள்ளன.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

இது கமல் மற்றும் ரஜினிக்கு பாஜக காட்டியிருக்கும் வெளிப்படையான பச்சைக்கொடி என்று சொல்லப்படுகிறது.

Leave a Response