தேர்தல் முடிந்ததும் எடப்பாடியின் பொதுச்செயலாளர் பதவி பறிப்பு?

தேர்தலுக்காக அதிமுகவும் பாஜகவும் கூட்டணி அமைத்துள்ளன.இதுகுறித்து,அதிமுக தலைமையிலான கூட்டணி என்று எடப்பாடி பழனிச்சாமியும், என்டிஏ தலைமையிலான கூட்டணி என்று அமித்ஷாவும் பொதுமேடைகளில் கூறிவந்தனர்.இது அதிமுகவினர் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தி வந்தது. பாஜக தலைவர்கள் சொல்வதைத்தான் எடப்பாடி மற்றும் முன்னாள் அமைச்சர்கள் கேட்கவேண்டிய கட்டாயத்தில் இருந்துவந்தனர். இரண்டு கோடி தொண்டர்களைக் கொண்ட இயக்கத்தின் தலைவரை டெல்லிக்கு வரவழைத்து அமித்ஷா பேசியது, அதிமுகவினர் இடையே கொந்தளிப்பை ஏற்படுத்தியது.

ஜெயலலிதா இருந்திருந்தால் இப்படி எல்லாம் நடக்குமா? என சமூக வலைதளங்களில் தங்கள் ஆதங்கங்களைக் கொட்டித் தீர்த்தனர்.

இதற்கிடையே, தமிழ்நாடு தேர்தல் குறித்து ஒன்றிய உளவுத்துறையின் அறிக்கை,இந்தக் கூட்டணிக்குக் கவலை அளிக்கும் வகையில் இருப்பதாகச் சொல்லப்படுகிறது. இந்தத் தகவல் அமித்ஷாவுக்கு சென்றதால் அவர் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி மீது கடும் அதிருப்தியில் இருப்பதாக கூறப்படுகிறது.

இதனால்தான் அமித்ஷா தமிழ்நாட்டில் பரப்புரையைக் குறைத்துக் கொண்டதாக தகவல் வெளியாகியுள்ளது. பிரதமர் மோடி 4 முறைக்கு மேல் தமிழ்நாட்டுக்கு வந்த நிலையில் அமித்ஷா,பாஜக போட்டியிடும் மொடக்குறிச்சி மற்றும் மயிலாப்பூர் தொகுதியில் மட்டுமே பரப்புரை செய்தார். அதன்பின்பு வர அவர் விரும்பவில்லை என்றும் கூறப்படுகிறது.

அதிமுக இந்தத் தேர்தலில் கடும்சரிவைச் சந்திக்கும் என்றும் தோல்வி குறித்தும் முக்கியமான அறிக்கையை ஒன்றிய உளவுத்துறை அமித்ஷாவுக்கு கொடுத்துள்ளதால், கடுங்கோபத்தை ஏற்படுத்தியுள்ளாம். இதனால் தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு அதிமுக பொதுச்செயலாளரை மாற்றுவதற்கு அவர் முடிவெடுத்து அதற்காக தமிழ்நாட்டில் காய் நகர்த்தி வரும் தகவலும் அதிமுக முக்கிய நிர்வாகிகள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளதாம்.

இதற்கான உள்ளடி வேலைகளில் அண்ணாமலையை அமித்ஷா களம் இறக்கியுள்ளதாகக் கூறப்படுகிறது. இதற்காக அதிமுகவில் வெற்றி வாய்ப்புள்ள வேட்பாளர்களை குறி வைத்து அண்ணாமலை பரப்புரைக்குச் சென்றதும் தெரியவந்துள்ளது.

அந்த அதிமுக வேட்பாளர்களுடன் அண்ணாமலை திருப்திகரமாக பேச்சுவார்த்தை நடத்தி அவர்களை அமித்ஷா வசம் கொண்டு வரும் வேலைகளை கன கச்சிதமாக முடித்துள்ளதாகத் தெரியவந்துள்ளது. இதற்காக பிளான்-ஏ திட்டத்தை மறைமுகமாக அமித்ஷா செயல்படுத்தி வருவது தெரியவந்துள்ளது. தேர்தல் தோல்வி, சில விசயங்களில் முரண்பட்டு வருவது உள்ளிட்டவைகளால் எடப்பாடி பழனிச்சாமி மீது அமித்ஷா கடும் அதிருப்தியில் இருப்பதாகவும், அதனால் இந்த அதிரடி நடவடிக்கையை அமித்ஷா கையில் எடுத்ததும் தெரியவந்துள்ளது.

அதிமுகவின் பொதுச்செயலாளர் பதவியை, கோவையைச் சேர்ந்த ஒருவருக்கு வழங்குவதற்கான ஆயத்தப் பணிகளை அமித்ஷாவும் அவருடைய குழுவினரும் கனகச்சிதமாகச் செய்து வருவதாக பாஜக தலைவர்கள் மத்தியில் இரகசியமாகப் பேசப்படும் தகவல் அதிமுகவினர் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Leave a Response