இளைஞர்கள் நிம்மதியாக இருக்க ரஜினி சொல்லும் வழி

பாரதியாரின் பிறந்தநாள் விழா டிசம்பர் 11 ஆம் தேதி கொண்டாடப்படுகிறது.

இந்தவருடம் அவருடைய பிறந்தநாளையொட்டி நடிகர் ரஜினிகாந்த் ஒரு காணொலியை வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது….

பாரதியாரிடம் எனக்கு முதலில் பிடித்தது அவரது தோற்றம். முண்டாசு, முறுக்கிய மீசை என்று அப்போதே வித்தியாசமானவராக தன்னைக் காட்டியவர். என்னைப் பொறுத்தவரை பாரதியாரைக் கவிஞர் என்று சொல்வதை விட, அவர் மிகப்பெரிய ஞானி. தன்னைத்தானே உணர்ந்த ஒரு ஞானி. அவருடையை வார்த்தைகள், கவிதைகள், எழுத்துகள் எல்லாம் இன்னும் சாகா வரம் பெற்று நேரங்கள் ஆக ஆக காலங்கள் ஓட ஓட அதன் வலிமை இன்னும் அதிகமாகிக் கொண்டிருக்கிறது. அதற்குக் காரணம் தன்னைத்தானே உணர்ந்த ஒரு ஞானியிடம் இருந்து வந்த வார்த்தைகள் என்பதால்தான்.

அந்தக் காலகட்டத்தில் திருவள்ளுவர், அவ்வை. இந்தக் காலகட்டத்தில் பாரதியார். எனக்கு அவர் கவிதைகள் நிறையப் பிடித்தது இருக்கிறது. ‘‘சாதிகள் இல்லையடி பாப்பா’’, ‘‘தனி ஒரு மனிதனுக்கு உணவில்லை எனில் ஜகத்தினை அழித்திடுவோம்’’ இந்த மாதிரி சொல்லிக்கொண்டே போகலாம்.

இப்போதைய இளைஞர்கள், மாணவர்கள் நல்ல வி‌சயங்களைத் தெரிந்துகொள்ள வேண்டும், கற்றுக்கொள்ள வேண்டும் என்றால் திருவள்ளுவர், அவ்வை, பாரதியார் ஆகியோரின் கவிதைகள், அவர்கள் எழுதிய எழுத்துகளைப் படித்தாலே போதும். அவர்கள் வாழ்க்கையில் வெற்றிகரமாக, சந்தோ‌சமாக, நிம்மதியாக இருக்கலாம்.

மகாகவி பாரதியாரின் 136 ஆவது பிறந்தநாளை விமரிசையாகக் கொண்டாடுகிறார்கள். அது நல்லபடியாக நடக்க வேண்டும் என்று சொல்லி நான் வாழ்த்துகிறேன்

இவ்வாறு ரஜினிகாந்த் பேசியுள்ளார்.

Leave a Response