இந்தியாவின் மிக மூத்த அரசியல் தலைவர்களில் ஒருவரும், தமிழக முன்னாள் முதல்-அமைச்சரும், திமுக தலைவருமான கருணாநிதி உடல் நலக் குறைவால் நேற்று மாலை காலமானார். அவருக்கு வயது 95.
மெரினா கடற்கரையில் உள்ள அண்ணா நினைவிடத்தின் வலதுபுறத்தில் திமுக தலைவர் கருணாநிதியின் உடலை அடக்கம் செய்யவிருக்கிறார்கள்.
தி.மு.க.வை தொடங்கிய மறைந்த முன்னாள் முதல்-அமைச்சர் அறிஞர் அண்ணா மறைந்தபோது, அவரது நினைவிடத்தில், “எதையும் தாங்கும் இதயம் இங்கே உறங்குகிறது” என்ற வாசகம் இடம் பெற்றிருந்தது.
“ஓய்வெடுக்காமல் உழைத்தவன் இதோ ஒய்வு கொண்டிருக்கிறான்” என்ற வாசகம் சந்தனப் பேழையிலும், உடல் அடக்கம் செய்யும் இடத்திலும் எழுத வேண்டும் என திமுக தலைவர் கருணாநிதி விரும்பினார்.
அதுபோலவே சந்தனப்பேழையில் எழுதப்பட்டு உள்ளது.