அநாகரிக நடத்தையால் சர்ச்சையில் சிக்கிய பிக்பாஸ்

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு போதிய வரவேற்பு இல்லை. இதனால் சர்ச்சைகளை உருவாக்கி அதைப் பிரபலப்படுத்த முயற்சி செய்கிறார்கள் போலும்.

ஜூலை 31 அன்று நிகழ்ச்சியில், ஐஸ்வர்யா அவருடைய அதிகாரத்தைக் கையிலெடுத்து எந்த டாஸ்க்கிலும் கலந்து கொள்ள முடியாது என்று சொன்ன பாலாஜிக்கு தண்டனை கொடுப்பதாகச் சொல்லி, வீட்டிற்குள் இருந்த ஒரு குப்பைக் கூடையை எடுத்து அதிலிருந்த குப்பைகளை பாலாஜி மீது கொட்டினார்.

இதற்குக் கடும் எதிர்ப்புகள் எழுந்துள்ளன. இதைக்கண்டித்துப் பலர் பேசிக்கொண்டிருக்கிறார்கள்.

இப்படிப்பட்ட அநாகரிகங்களால் மட்டுமே பிக்பாஸ் நிகழ்ச்சியைப் பிரபலப்படுத்த முடியும் என்று நம்பினால் அதைவிடத் தவறொன்றுமில்லை.

Leave a Response