நடிகை சாய் பல்லவி முதன்முதலாகத் தமிழில் அறிமுகமாகும் படம் ‘கரு’. இந்தப் படத்தை, ஏ.எல்.விஜய் இயக்கியுள்ளார். இந்தப் படத்தில் நடிகை சாய் பல்லவி ஒரு குழந்தைக்குத் தாயாக நடித்துள்ளார்.படத்தை லைகா புரொடக்ஷன்ஸ் தயாரித்திருக்கிறது. படம் வருகிற 23ஆம் தேதி ரிலீஸாக இருக்கிறது.
இந்நிலையில், இயக்குனர் ஏ.எல். விஜய் தன்னுடைய அடுத்த படத்தையும் இயக்கி முடித்துவிட்டார்.பிரபுதேவா ஹீரோவாக நடித்துள்ள இந்தப் படத்திற்கு ‘லட்சுமி’ என தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. டான்ஸை மையமாகக் கொண்ட இந்தப் படத்தில், ஐஸ்வர்யா ராஜேஷ் ஹீரோயினாக நடித்துள்ளார். இந்தப் படத்திற்கு சாம் சி.எஸ். இசையமைத்துள்ளார். இந்தப் படத்தில், மொத்தம் 12 பாடல்கள் இடம்பெற்றுள்ளன. இதன் படப்பிடிப்பு இரண்டு நாட்களுக்கு முன்பு முடிவடைந்துள்ளது.