அனிதாவின் சொந்த ஊரில் அனிதா நூலகம் அடிக்கல்நாட்டு விழா

நீட்’ எதிர்ப்பு போராளியான மருத்துவ மாணவி அனிதாவின் நினைவாக 7.2.2018 அன்று மாலை 5 மணிக்கு அனிதாவின் சொந்த ஊரான குழுமூரில் ‘அனிதா நூலகம்’
அடிக்கல் நாட்டுவிழா நடைப்பெற்றது.

திமுக சார்பில் எஸ்.எஸ்.சிவசங்கர்,அதிமுக சார்பில் ராமச்சந்திரன்,விடுதலைச்சிறுத்தைகளின் சார்பில் வன்னியரசு ஆகியோர் கலந்து கொண்டனர்.

இவர்களோடு திரைப்பட நடிகர் ராகவா லாரன்ஸ் கலந்து கொண்டு அடிக்கல் நாட்டு விழாவைத் தொடங்கி வைத்தார்.

ராஜாஜி கொண்டுவந்த குலக்கல்வித்திட்டத்தின் மறு வடிவம் தான் இந்த நீட். தமிழகத்துக்கு மட்டுமல்ல, இந்தியா முழுக்க நீட் கூடாது என்பது தான் தமிழ்மக்களின் நிலைப்பாடு.

சமூக நீதிக்காக வீரச்சாவடைந்த அனிதாவின் இலட்சியம் நீட் கூடாது என்பது தான். தாழ்த்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட மக்கள் படித்து விடக்கூடாது என்கிற மனுதருமக் கொள்கையை நடைமுறைப்படுத்தத் துடிக்கும் இந்துத்துவ பாசகவை வீழ்த்துவது ஒன்றே, தங்கை அனிதாவுக்கு நாம் செய்யும் அஞ்சலி என்று விழாவில் கலந்துகொண்ட பலரும் பேசினர்.

Leave a Response