நிவேதா பெத்துராஜூக்கு இயக்குனர் போட்ட நிபந்தனை….!


தமிழ் சினிமாவில் ‘ஒருநாள் கூத்து’ படம் மூலம் அறிமுகமானவர் நடிகை நிவேதா பெத்துராஜ். தற்போது இவர் வளர்ந்து வரும் நடிகைகளுள் ஒருவராக இருந்து வருகிறார். தற்போது நிவேதா பெத்துராஜ், ஜெயம் ரவிக்கு ஜோடியாக ‘டிக் டிக் டிக்’ படத்தில் நடித்துள்ளார். இதையடுத்து வெங்கட் பிரபுவின் ‘பார்ட்டி’ படத்திலும் நடித்துள்ளார். இந்த இரு படங்களும் விரைவில் வெளியாகவுள்ளன.

இந்நிலையில் விஜய் ஆன்டனியின் ‘திமிரு பிடிச்சவன்’ படத்தில் ஹீரோயினாக நடிக்க நிவேதா பெத்துராஜ் ஒப்பந்தமாகியுள்ளார். விஜய் ஆன்டனி இந்தப் படத்தில் போலீசாக நடிக்கிறார். இவருடன் இணைந்து நடிகை நிவேதாவும் போலீசாக நடிக்கிறார். ஆகையால் படத்தின் போலீஸ் கேரக்டருக்காக புல்லட் ஓட்ட பயிற்சி எடுத்து வருகிறார் நடிகை நிவேதா பெத்துராஜ்.

Leave a Response