சிவகார்த்திகேயனுக்கு அடித்த ஜாக்பாட்..!


நடிக்க வந்து ஹீரோவாக மாறிய குறுகிய காலத்திலேயே சிவகார்த்திகேயனின் கனவுகள் பல நனவாகி வருகின்றன. முதல் படத்திலேயே தனுஷுடன் நடித்தது, அடுத்து தனுஷின் தயாரிப்பில் நடித்தது, நயன்தாராவுக்கு ஜோடியாக நடித்தது, பி.சி.ஸ்ரீராம் தனது படத்திற்கு ஒளிப்பதிவு செய்தது என சிவகார்த்திகேயன் நினைத்தே பாராத விஷயங்கள் அவருக்கு நடந்து வருகின்றன.

இந்தவகையில் நம்ம படத்திற்கெல்லாம் இவர் இசையமைக்க மாட்டாரா என பலர் ஏங்கிக்கொண்டு இருக்கையில், சிவகார்த்திகேயன் நடிக்கவுள்ள புதிய படத்திற்கு இசைப்புயல் ஏ.ஆர்.ரகுமான் இசையமைக்க இருக்கிறார் என்கிற அதிகாரப்பூர்வமான அறிவிப்பு வெளியாகியுள்ளது. ஆர்.ரவிக்குமார் இயக்கும் இந்தப்படத்தை ஆர்.டி.ராஜா தயாரிக்கிறார்.

Leave a Response