‘நாடோடிகள்-2’ வுக்காக மீண்டும் இணையும் சமுத்திரகனி-சசிகுமார்..!


2009ம் ஆண்டு இயக்குநர் சமுத்திரகனி இயக்கத்தில் சசிகுமார் நடிப்பில் வெளிவந்த ‘நாடோடிகள்’ திரைப்படம் மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்று வசூலில் புரட்சி செய்தது. அதை தொடர்ந்து சில படங்களில் இணைந்து நடித்துவந்த சமுத்திரகனி – சசிகுமார் கூட்டணி இப்போது மீண்டும் இணையவுள்ளது.

ஆம். சமுத்திரகனி இயக்கத்தில் சசிகுமார் கதாநாயகனாக நடிக்கும் “நாடோடிகள் 2” திரைப்படம் விரைவில் தொடங்கப்படவுள்ளது. இப்படத்தின் மற்ற நடிகர் நடிகையர் தேர்வு நடைபெற்று வருகிறது.

நாடோடிகள் மற்றும் இன்ஸ்பைர் எண்டர்டெயின்மெண்ட் இணைந்து மிகுந்த பொருட்செலவில் பிரம்மாண்டமாக தயாரிக்கும் இந்தப்படத்திற்கு ஜஸ்டின் பிரபாகரன் இசையமைக்கிறார்.

Leave a Response