ஜன-26ல் ‘டிக் டிக் டிக்’ ரிலீஸ்..! !


‘மிருதன்’ படத்தை தொடர்ந்து இயக்குநர் சக்தி செளந்தர்ராஜன் இயக்கத்தில் ஜெயம் ரவி நடித்துள்ள படம் ‘டிக் டிக் டிக்’. இந்தியாவின் முதல் விண்வெளி திரைப்படம் என்கிற பெருமையுடன் உருவாகி இருக்கும் இந்தப்படத்தில் கதாநாயகியாக நிவேதா பெத்துராஜ் நடிக்க, ரமேஷ் திலக் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

இந்தப்படத்தில் முக்கியமான ஒரு ரோலில் ஜெயம் ரவியின் மகன் ஆரவ்வும் நடித்துள்ளார். ட்ரெய்லரில் காட்டப்பட்டுள்ள காட்சிகளில் விண்வெளி ஆராய்ச்சி சம்பந்த காட்சிகளில் ஆர்ட் டைரக்‌ஷன் பலரின் கவனத்தை ஈர்த்துள்ளது.

இந்தப்படத்திற்கு தணிக்கை குழுவினர் ‘யு’ சான்றிதழ் வழங்கியுள்ளனர். திட்டமிட்ட தேதியில் எந்த மாற்றமும் இல்லாமல், வரும் ஜன-26ஆம் தேதி இந்தப்படம் ரிலீஸ் ஆக இருக்கிறது.

Leave a Response