பிப்-2 தான் விஜய்சேதுபதி பட ரிலீஸிற்கு நல்லநாள்..!


விஜய்சேதுபதி, கெளதம் கார்த்திக் இணைந்து நடிக்கும் திரைப்படம், ‘ஒரு நல்ல நாள் பாத்து சொல்றேன்’. ஆறுமுக குமார் இந்தப் படத்தை இயக்கியுள்ளார். ஜஸ்டின் பிரபாகரன் இசையமைத்துள்ள இந்தப்படத்தின் பாடல்களை சமீபத்தில் நடைபெற்ற நட்சத்திர கலைவிழாவில் வெளியிட்டார்கள். இந்தநிலையில் படத்தை பார்த்த சென்சார் அதிகாரிகள் படத்திற்கு ‘யு’ சான்றிதழ் வழங்கியுள்ளனர்.

இதனை தொடர்ந்து வரும் பிப்-2ஆம் தேதி இந்தப்படம் ரிலீசாக இருப்பதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர். இந்தப்படத்தில் பழங்குடி இனத்தலைவர் உள்ளிட்ட எட்டு வெவ்வேறு தோற்றங்களில் விஜய்சேதுபதி நடித்துள்ளார் என்பது படத்தின் ஹைலைட்டான விஷயம்..

Leave a Response