பிக்பாஸ் முடிந்த பிறகு ஓவியா பற்றி ஆரவ் சொன்னது இதுதான்

விஜய் தொலைக்காட்சி நடத்திய பிக்பாஸ் நிகழ்ச்சியின் இறுதியில், போட்டியாளர்களில் ஆரவ் வெற்றியாளர் ஆனார்.

பிக் பாஸ் நிகழ்ச்சி முடிந்தவுடன் சில நாட்கள் கழித்து, ஆரவ் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பின்தொடர்பவர்கள் எழுப்பிய கேள்விகளுக்குப் பதிலளித்துள்ளார்.

அவற்றில்,

அடுத்த 10 நாட்களுக்குள், பிக்பாஸுக்குப் பிறகான எனது முதல் படத்தைப் பற்றி அறிவிக்கவுள்ளேன். இப்போதே அது குறித்து பேச ஆர்வமாக இருக்கிறேன். கூடிய விரைவில் சொல்கிறேன்.

ஓவியா எனக்கு மிக நல்ல நண்பர். பிக்பாஸ் இறுதிக்குப் பிறகு அவரை நான் சந்திக்கவில்லை. எனவே, அவரைச் சந்திக்கும்போது கண்டிப்பாக ஒரு புகைப்படம் எடுத்து பதிவேற்றுகிறேன். கதைக்குத் தேவைப்பட்டால் கண்டிப்பாக அவருடன் இணைந்து நடிப்பேன்.

பிக்பாஸ் வீட்டை இப்போதும் நினைத்துக் கொள்கிறேன். சிலரை நேரில் சந்தித்து வாழ்த்துகள் பெற்றேன். சில நாட்களாக மொபைலை எடுக்கவில்லை. அதனால் தான் பிக்பாஸ் முடிந்தவுடன் என்னால் ஆன்லைன் வர முடியவில்லை. அதற்கு மன்னித்துவிடுங்கள்.

பிக் பாஸ் நிகழ்ச்சி முடிந்த பிறகு இன்னும் ஓவியாவிடம் பேசவில்லை. பேசியபிறகு, அடுத்த நேரலையில் அதைப் பற்றி சொல்கிறேன்.

இவ்வாறு அவர் சொல்லி இருக்கிறார்.

Leave a Response