இசுலாமியர்கள் இந்நாட்டின் பூர்வகுடிகளே – சான்றுகளுடன் ஒரு கட்டுரை


அத்தா என்பது பழந்தமிழ்ச் சொல்.

தமிழ் இசுலாமியர்கள் தனது தந்தையை அத்தா என்றழைப்பர்…

அத்தன் என்பதுதான் அத்தா என்று அழைக்கப்படுகிறது…

அத்தன் என்றால் தகப்பன் என்று பொருள்…

பழைய இலக்கியங்களில் அத்தா என்ற சொல்லை நிறைய இடங்களில் காணலாம்…

அத்தா, அச்சன், முத்தன், அப்பா என்பதெல்லாம் தகப்பன் என்பதனையே குறிக்கும்…

“அத்தா உனக்காளாய் இனி அல்லேன் எனலாமே” தேவாரம்.

” சைவ சமயக் குரவர்களுள் ஒருவரான அப்பர் சிவனைத் தன் தந்தையெனக் கருதி இயற்றிய ஒரு பாடல் .

“அத்தா உன் அடியேனை அன்பால் ஆர்த்தாய்
அருள் நோக்கில் தீர்த்த நீராட்டிக் கொண்டாய்
எத்தனையும் அரியை நீ எளியை ஆனாய்
எனை ஆண்டு கொண்டு இரங்கி ஏன்று கொண்டாய்
பித்தனேன் பேதையேன் பேயேன் நாயேன்
பிழைத்தனன் அத்தனையும் பொறுத்தாயன்றே
இத்தனையும் எம்பரமோ ஐய ஐயோ
எம்பெருமான் திருக்கருணை இருந்தவாறே”” என்ற பாடலில் அத்தா என்ற சொல் வருவதை கவனிக்கலாம்.

அப்பன் -அப்பா, அத்தன் – அத்தா. தகப்பன் அல்லது தலைவன் என்ற பொருள் படும்.

துருக்கியனை அத்தா என்று அழைக்க காரணம் தலைவன் என்ற பொருளில்தான்

தமிழ் முஸ்லிம்கள் உறவு முறைகளுக்கு பயன்படுத்தும் வார்த்தை அத்தா !!
அப்பா என்கிறவன் தனக்கு வாழ்வு கொடுக்கிற இடத்தில் இருப்பதால் சிலர் அப்பாவை வாப்பா என்றழைப்பர்.

செம்மொழித் தமிழே தமிழக முஸ்லீம்களின் தாய்மொழி. அவர்களின் உள்ளத்திலும் இல்லத்திலும் உறைவதும் ஒலிப்பதும் செந்தமிழ். இதையே ‘எங்களுயிர்த் தமிழ் வழக்கு’ என்று அன்றே பாடினார் ஆபிதீன்.

‘பாத்திரத்தை ஏனம் என்போம்
பழையதுவை நீர்ச்சோறு என்போம்
ஆத்திரமாய் மொழி குழம்பை
அழகாக ஆணம் என்போம்
சொத்தையுரை பிறர் சொல்லும்
சாதத்தை சோறு என்போம்
எத்தனையோ தமிழ் முஸ்லிம்
எங்களுயிர்த் தமிழ் வழக்கே’

விளக்கவுரை தேவையில்லை. ஏனம், ஆணம், நீர்ச்சோறு, சோறு முதலான எண்ணற்ற உணவு மற்றும் உறவு முறைச்
சொற்களை தமிழ் முஸ்லிம்கள் ஆண்டாண்டு காலமாக
வழங்கி வருகின்றனர்.

இன்றைக்கு அத்துனை இஸ்லாமியர்கள் வீடுகளில் எல்லா நேரங்களிலும் தமிழ் நடைமுறைப் பேச்சில் வாழ்ந்து கொண்டிருக்கிறது

யாரெல்லாம் இன்றும் தொழுகை, நோன்பு ,ஆணம் பள்ளிவாசல்கள் என்று கூறுவாரோ அவரெல்லாம் சமணத்திலிருந்து வந்த தூய தமிழ் கடற்கரை வாழ் இஸ்லாமியர்களே!!!

தொல்காப்பியர்,திருவள்ளுவர்(வள்ளுவர் சமணரா என்ற கேள்வியும் உண்டு நாம் பிறகு பார்ப்பபோம் இதுபற்றி).

இளங்கோவடிகள் போன்றோர் சமணம் சார்ந்த படைப்பாளிகள்;அறிவாளிகள்!!!

தமிழ்நாட்டில்:-

கழுவில் ஏற்றப்பட்டுக் கொடுமைப்படுத்தப்பட்ட சமணர்கள் தான் முதன் முதலில் இஸ்லாத்திற்கு அதிகளவில் மாறினார்கள் என்றும் பள்ளிகள் என்பது சமணர்களின் வழிபாட்டுத்தலம்.

இதிலிருந்து தான் பள்ளிவாசல் என்று பெயர் வந்ததாகவும்,மேலும் தொழுகை நோன்பு என்பன தூய தமிழ் என்பதும் அதை முழுக்க முழுக்க சமணர்களே பயன்படுத்தினார்கள்.

இஸ்லாத்திற்கு வந்த சமணர்களே இன்றும் அதாவது இன்றைய தாய்மொழி தமிழ் பேசும் முஸ்லிம்களே இந்த வார்த்தைகளை இன்றும் பயன்படுத்துகிறார்கள்

மூதாதயரை தேடுவோம் அழிக்கப்பட்ட வரலாற்றை பரப்புவோம்!!

14ஆம் நூற்றாண்டுகளில்தான் இஸ்லாமியர்கள் இலக்கண இலக்கிய காப்பியங்களை இயற்றுபவர்கள் வருகை அதிகரித்தது அதிலும் கூர்ந்து கவனித்தால் தெரியும் அனைவருமே கடற்கரையை ஒட்டிய முஸ்லிம்கள் !!!

காரணம் சமணத்திலிருந்து இஸ்லாத்தை வாழ்வியல் முறையாக மாற்றிக்கொண்டார்கள் கடற்கரை சமணர்கள் !!

வள்ளுவர் புலால் உண்ணுதலையும் கசாப்பு கடைகளையும் எதிர்க்கிறார் ..
கொல்லாமையை வழியுறுத்துகிறார் வள்ளுவர்காலத்தில் மாமிசம் சாப்பிட்டவர்கள் யார்?

பௌத்தத்தை அழித்தவர்களே சமணத்தையும் அழித்த ஆரிய வந்தேரிகளே!!!

இன்று அவர்களுக்கு இஸ்லாம் இடையூறாக இருக்கிறது. ஒரு விசயத்தை கவனிக்கனும் இங்கே சமணம் வளர்ந்ததே அதிகம் அதிகம் புலால் உண்ணாத கொள்கையாலே . வேறு வழியின்றி வந்தேறிகளும் புலால் உண்ணாமையையும் சோம பானம் மதுவை அறுந்தாமலும் வாழவேண்டியகட்டாயம்!!!
இன்று அவர்கள் புலால் உண்ணாதவர்கள் நாங்கள் என்று சொல்லிக்கொண்டாலும் அவர்களின் தொழிலை விட முடியவில்லை ஆம் மாட்டு இறைச்சி ஏற்றுமதியில் முதலிடம் அவர்களே!!

முஸ்லிம்களை அடிப்பது தொழில்போட்டியே!!!

மதசாயம் உள்ளே பூசிகொண்டு வெளியில் ஏற்றுமதி அப்போதானே அதிகம் ஏற்றுமதி செய்து குல தொழிலை காக்க முடியும்.

ஆரிய சைவ கொடுமையால் வேறு வழியின்றி தற்காப்புக்காக.இருப்பினும் சமணர்கள் இஸ்லாத்திற்கு வந்து கொள்கையான புலாலை ஆரம்பத்தில் உண்ணாமலே இருந்துள்ளனர். காலப்போக்கில் இஸ்லாமிய கொள்கையில் பற்றுகொண்டும் பல நாடுகளின் வணிகதொடர்பாலும் வழக்கம் மாறியுள்ளது!!!

மது இஸ்லாத்தில் தடை சமணரளுக்கு இஸ்லாம் ஒரு கொடை!!

சமணர்கள் தான் இஸ்லாத்திற்கு வந்து தமிழ்காப்பியங்களையும் இலக்கியங்களையும் தமிழ் பற்றை நிறுபித்துள்ளனர்.

நாகூர் காயல்பட்டினத்தவரே அதிகம் தமிழ் இலக்கண, காப்பியங்கள் எழுத்தாளர்களை காணமுடிகிறது!!!

காரணம் சமணத்திலிருந்து இஸ்லாத்தை முழுவதும் படிப்படியாக உள்வாங்கி கொண்டு இஸ்லாத்தை ஏற்று தமிழை வளர்த்துள்ளார்கள்!!

தான் எந்த மதம் ஜாதி வந்தோம் என்பதே மறக்கடித்து மதிப்பை வழங்கும் இஸ்லாமே வாழ்க போற்றி தழைக்க மென்மேலும்!!!

இஸ்லாமியர்கள் 14ஆம் நூற்றாண்டு முதல் இன்று வரை அதிகம் தமிழுக்கு தொண்டு செய்வதை காணலாம்

துலக்கமானவர்தான் துலுக்கன் இல்லை!!!


ஒப்பரிய சட்டையும் உடுத்திலகு பட்டும்
தொப்பியும் முகத்திடை துலக்க முளராகி”

(திருவாதவூர்ப் புராணத்தில்)

திருவாதவூரடிகள் புராணம்:-

கடவுள் மாமுனிவர் இயற்றிய திருவாதவூரடிகள் புராணம்
545 செய்யுட்களைக் கொண்டது. அளவில் இது சிறிய நூல்.

சுந்தரரும், சேக்கிழாரும் மாணிக்கவாசகரைப் பாடவில்லை.
பின்னர் வந்த கடவுள் மாமுனிவர் அக்குறையைச் சரி செய்யும் வகையில் மாணிக்கவாசகர் வரலாற்றைப் பாடியதாகக் கொள்ளலாம். இதன் முக்கியச் சிறப்பு இதுவேயாகும்.

இஸ்லாமியர்கள் அரபு நாடுகளில் இருந்து வந்தவர்களல்ல
வணக்க வழிபாடுகள் மாறியதே தவிர அவர்கள்
இந்நாட்டின் பூர்வகுடிகள்….
எமதுறவே..

நன்றி ; Rajan kochimon & பாசிச எதிர்ப்பாளர்களின் குரல்.
12/10/2017 முகநூலின் பதிவு.

Leave a Response