அமெரிக்காவில் 56 பேரைச் சுட்டுக்கொன்றதற்கும் காவியன் படத்துக்கும் என்ன தொடர்பு?

அமெரிக்காவின் கேளிக்கை நகரான லாஸ்வேகாசில் 3 நாள் அறுவடை திருவிழாவின் நிறைவு நாள் இசை நிகழ்ச்சி நேற்று முன்தினம் இரவு 10.45 மணி அளவில் (இந்திய நேரப்படி நேற்று பகல் 11.15 மணி) மண்டலாய் பே என்னும் ஓட்டலில் நடந்தது.

பிரபல நாட்டுப்புற பாடகர் ஜேசன் அல்டியன் குழுவினர் ஓட்டலின் கீழேயுள்ள திறந்த வெளியில் இசைக் கச்சேரி நடத்திக்கொண்டிருந்தனர். இதை கண்டுகளிக்க ஆயிரக்கணக்கானோர் திரண்டு இருந்தனர்.

அப்போது அந்த ஓட்டலின் 32-வது மாடியில் இருந்து இசைத் திருவிழா நடந்த பகுதியை நோக்கி ஒருவன் திடீரென துப்பாக்கியால் சரமாரியாக சுடும் சத்தம் கேட்டது. இதனால் இசைக் கச்சேரியை காண வந்தவர்கள் அலறியடித்தவாறு ஓட்டலின் வெளியேறும் வழியை நோக்கி ஓட்டம் பிடித்தனர்.

எனினும் நாலா திசையிலும் ஓடியவர்கள் மீதும் மர்ம மனிதன் துப்பாக்கியால் தொடர்ந்து சுட்டுக்கொண்டே இருந்தான்.

இதைத்தொடர்ந்து போலீஸ் அதிகாரி ஒருவரும், ஓட்டலின் பாதுகாவலரும் மர்ம மனிதனை பிடிப்பதற்காக ஓட்டலின் 32-வது மாடிக்கு விரைந்து சென்றனர். அவர்களையும் அவன் சரமாரியாக சுட்டான். இதில் இருவரும் சம்பவ இடத்திலேயே பலியாயினர். மேலும் இந்த தாக்குதலில் 56 பேர் பரிதாபமாக உயிர் இழந்தனர்.

இதையடுத்து சம்பவ இடத்துக்கு அதிரடிப்படையினர் விரைந்தனர். அவர்கள் பாடகர் அல்டியனையும், இசைக் கச்சேரியை காணவந்த ஏராளமான ரசிகர்களையும் பத்திரமாக மீட்டனர்.

படுகாயம் அடைந்த 2 போலீஸ் அதிகாரிகள் உள்பட 515 பேரை மீட்டு சிகிச்சைக்காக லாஸ்வேகாஸ் பல்கலைக்கழக ஆஸ்பத்திரிக்கு ஆம்புலன்சுகளில் அனுப்பி வைத்தனர். இவர்களில் பலருடைய நிலைமை கவலைக்கிடமாக இருப்பதாக ஆஸ்பத்திரியின் செய்தித்தொடர்பாளர் தெரிவித்தார்.

அமெரிக்காவில் அக்டோபர் 2 ஆம் தேதி இக்கொடூர நிகழ்வு நடந்திருக்கிறது. சிலநாட்களுக்கு முன்பு அதே இடத்தில் ஒரு தமிழ்ப்படத்தின் படப்பிடிப்பு நடந்திருக்கிறது.

பார்த்தசாரதி இயக்கத்தில் ஷாம், ஆத்மியா உட்பட பலர் நடிக்கும் காவியன் படப்பிடிப்பு அங்கே நடந்திருக்கிறது. இந்நிகழ்வு பற்றிய செய்தி வெளியானதும் காவியன் படக்குழுவினர் வெளியிட்ட செய்திக்குறிப்பில்,,,,

காவியன் படப்பிடிப்பு தளத்தில் துப்பாக்கிச் சூடு.

அமெரிக்காவின் லாஸ் வேகாஸ் நகரில் கடந்த ஞாயிறு மாலை நடந்த கோர சம்பவம் ஸ்டிபன் க்ரைக் என்ற 64 வயது பைத்தியக்காரன் ஒருவன் 50 அமெரிக்கர்களைச் சுட்டுக் கொன்றுள்ளான். ஒரு ஹோட்டலின் 34 ஆவது மாடியில் நின்று கீழே நடந்து கொண்டிருந்த இசை விழாவில் கூடியிருந்த மக்களை நோக்கி இயந்திர துப்பாக்கியால் சுட்டுக் கொன்றுள்ளான்.

இந்த சம்பவத்தால் அமெரிக்கா முழுவதும் அதிர்ச்சியிலும், சோகத்திலும் ஆழ்ந்துள்ளது. இதில் பிரமிக்கத்தக்க உண்மை என்னவெனில் இதே இடத்தில் கடந்த சில நாட்களுக்கு முன்பு காவியன் படத்தின் படப்பிடிப்பு நடந்தது. இதே போன்ற சூட் அவுட் சம்பவம் அங்கு படமாக்கப்பட்டது. அதில் ஹாலிவுட் நடிகர் நடித்திருந்தார். இதில் அதிர்ச்சி என்னவெனில் கொலையாளி நின்ற அதே 34 ஆம் தளத்தில் தான் அந்தக் காட்சியின் கேமரா வைக்கப்பட்டு ஒளிப்பதிவாக்கப்பட்டது

இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

Leave a Response