ராணாவின் படத்தை எதிர்பார்க்கும் யுவன் சங்கர் ராஜா..!


தெலுங்கில் ராணா நடிப்பில் உருவான படம் ‘நேனே ராஜு நேனே மந்திரி’. இந்தப் படம் அரசியல் சம்பந்தப்பட்ட படம். இந்தப் படத்தை தமிழில் ‘நான் ஆணையிட்டால்’ என்ற பெயரில் ரீமேக் செய்துள்ளனர். இந்தப் படம் நேரடி தமிழ்ப் படம் போல இருப்பதற்கு சில காட்சிகளை நேரடியாக ஷூட் பண்ணியுள்ளார் இயக்குனர் தேஜா.

மேலும் காமெடி அதிகமாக இடம்பெற வேண்டும் என்பதற்காக காமெடி நடிகர்கள் மயில்சாமி மற்றும் ஜெகனை வைத்து சில காட்சிகளைத் தமிழில் ஷூட் செய்துள்ளனர். இந்தப் படத்தை, யுவன் சங்கர் ராஜாவின் ஓய்.எஸ்.ஆர். நிறுவனமும், ‘பாகுபலி’ படத்தை வெளியிட்ட ‘கே’ நிறுவனமும் இணைந்து தயாரித்துள்ளது. இந்தப் படம் விரைவில் வெளியாகவுள்ளது. அதனால் இந்தப்படத்தின் வெற்றியை ஆவலுடன் எதிர்பார்க்கிறார் யுவன் சங்கர் ராஜா.

Leave a Response