நாம்தமிழர்கட்சி சார்பாக ஐ.நா மனித உரிமைக் கூட்டத்துக்குச் சென்ற இயக்குநர் வெற்றிமாறன்

சுவிஸ் நாட்டில் உள்ள ஜெனிவாவில் ஐக்கிய நாடுகள் சபை 36 வது மனித உரிமை கூட்டத்தொடர் நடந்துவருகிறது.

இந்தக் கூட்டத்தொடரில் கலந்து கொள்ள, தமிழகத்திலிருந்து வைகோ, வ.கவுதமன் ஆகியோர் சென்றுள்ளனர். இவர்கள் மட்டுமின்றி நாம்தமிழர் கட்சியின் சார்பாக ஒரு குழு அங்கு சென்றிருக்கிறது.

அக்குழுவில் பத்துக்கும் மேற்பட்டோர் இடம்பெற்றிருக்கிறார்களாம். அவர்கள் அடுத்துவரும் 8 நாட்களும் ஜெனிவாவின் ஐநா சபையின் மனித உரிமை அமர்வில் கலந்து கொண்டு இலங்கையில் நடைபெற்ற இனப்படுகொலை மற்றும் அந்தச்சமயத்தில் மீறப்பட்ட மனித உரிமைகள் ஆகியனவற்றைச் சான்றுகளோடு ஐநா மன்றத்தில் எடுத்துவைக்க இருக்கின்றார்கள்.

அந்தக்குழுவில், முனைவர் . பால்நியூமன் ( சர்வதேச தொடர்பாளர்), இயக்குனர். செகதீச பாண்டியன், (இளைஞர் பாசறை ஒருங்கிணைப்பாளர்), வழக்கறிஞர் ராஜிவ்காந்தி (இளைஞர் பாசறை ஒருங்கிணைப்பாளர் ), பொன் சந்திரன்,இயக்குனர். வெற்றிமாறன், முனைவர். சுபாசு சந்திரா, புகழேந்தி மாறன் (தென்சென்னை மாவட்ட செயலாளர்), இயக்குனர். ஆர். கே. செல்வமணி, முனைவர்.செல்வன் அருள்நாதன், பொறியாளர். இங்கர்சால் செல்வராஜ் (நார்வே தொடர்பாளர்) பொறியாளர் சுமேஷ்குமார் (டென்மார்க் தொடர்பாளர்) ஆகியோர் பங்கு பெறுகிறார்கள்.

இந்த கூட்டத் தொடரின் முக்கிய அங்கமாக தமிழ் இனப்படுகொலைக்கான நீதியோடு சேர்ந்து ஜல்லிக்கட்டு போராட்டத்தின் போது அரசுத்தரப்பில் மக்கள் மற்றும் போராட்டக்காரர்கள் மீது நடந்த மனித உரிமை மீறல்கள் உட்பட தமிழ்நாட்டில் மற்றும் இந்தியாவில் நடக்கும் மனித உரிமை மீறல்கள் குறித்து பேசப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இது தொடர்பாக நாம்தமிழர்கட்சியின் செய்திக்குறிப்பு….

நாம் தமிழர் கட்சி சார்பாக ஐநா மனித உரிமை ஆணைய 36 வது மனித உரிமை கூட்டத்தொடர் ஜெனீவாவில் உரிமைப்பறிப்புகளை , மனித உரிமை மீறல்களை எதிர்த்து இந்தியாவில் அதன் அரசியல் அமைப்பு சட்டத்திற்கு ஏற்ப கூட்டாட்சி தத்துவத்தை (Federal Structure ) செயலளவில் நிறைவேற்ற வலியுறுத்தி பங்கேற்று உரையாற்றிக் கொண்டிருக்கும் அறிஞர்கள் குழு. இதில் தமிழர்கள் மட்டுமல்லாமல் வேறு மாநிலத்தோரும் நமக்காக பேசுவது தனிச்சிறப்பு . நாம் தமிழர் கட்சி ஆட்சியின் செயல்பாட்டு வரைவில் குறிப்பிட்ட செயல் திட்டங்களை அதிகாரத்திற்கு வராமலேயே தனது அதிகார எல்லைக்குள்ளாக இப்போதே நிறைவேற்ற முயலும் நாம் தமிழர் கட்சி.

ஆட்சியாளர்களோ தனது கட்சியையும், சின்னத்தையும் காப்பாற்றும் எண்ணத்தில் மூழ்கி அடிமைகளாய் கிடக்க இன்றைய சூழலில் இவ்வாறு ஒரு அறிஞர் குழுவை உருவாக்கி தமிழ்நாட்டின் பல்வேறு சிக்கல்களை ஐநாவிற்கு எடுத்துக்கூறி அறிவாயுதம் மூலம் தீர்வு காண குறைந்த பட்சம் முயற்சிக்கும் கட்சி தமிழ் நாட்டில் வேறு எந்த கட்சியும் இல்லை என்பதே நிதர்சனம். அன்பு மக்களே அயோக்கியனுக்கு நீங்கள் வாழ்க்கைப்பட்டது போதும். குறைந்த பட்சம் உங்கள் அடுத்த தலைமுறைக்காகவாவது யோக்கினுக்கு வாழ்க்கைப்படுங்கள் .
அதிகாரம் வலிமையானது அதை அடைந்து விட்டால் அனைத்தும் எளிதானது.

இவ்வாறு அந்தக் குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

Leave a Response