சண்டக்கோழி-2 படக்குழுவினரை நிலவேம்பு கசாயம் குடிக்கவைத்த மயில்சாமி..!


தற்போது தமிழகமெங்கும் டெங்கு காய்ச்சல் மிக வேகமாக பரவி வருகிறது. இதற்கு உரிய தடுப்பு மருந்தாக நிலவேம்பு கசாயம் அனைவரும் பருகவேண்டும் என அறிவுறுத்தப்படுகிறது.. நகைச்சுவை நடிகர் மயில்சாமி இதுபோன்ற விஷயங்களை கொஞ்சம் சீரியஸாக கவனம் எடுத்துக்கொள்பவர்.

அதனால் தற்போது ‘சண்டக்கோழி-2’ படத்தில் முக்கியமான வேடத்தில் நடித்துவரும் மயில்சாமி, படப்பிடிப்பு தளத்திற்கு நிலவேம்பு கசாயத்தை கொண்டுவந்து, விஷால், லிங்குசாமி உட்பட படக்குழுவினர் 2500 பேருக்கு கொடுத்து அனைவரையும் குடிக்க வைத்தார். வரும் முன் காக்கும் நடவடிக்கையாக இதை செய்ததாக மயில்சாமி கூறியுள்ளார்.

Leave a Response