தொடர்ந்து சூரிக்கு வாய்ப்பளிக்கும் ஹரி..!


இயக்குனர் ஹரியை பொறுத்தவரை தனது படங்களில் ஆக்சனுக்கு எந்த அளவுக்கு முக்கியத்துவம் கொடுக்கிறாரோ அதே அளவு காமெடிக்கும் முக்கியத்துவம் கொடுப்பார்.. அதற்காக காமாசோமாவென காமெடி நடிகர்களை தேர்ந்தெடுக்காமல் முன்னணி காமெடி நடிகர்களை கட்டாயம் பயன்படுத்துபவர்.

அந்தவகையில் கடைசியாக தான் இயக்கிய பூஜை, சிங்கம்-3 ஆகிய படங்களில் சூரியை பயன்படுத்திய ஹரி, தற்போது தான் இயக்கவுள்ள ‘சாமி-2’ படத்திலும் சூரியையே பயன்படுத்துகிறார். கடந்த 2003-ம் ஆண்டு விக்ரம், த்ரிஷா நடிப்பில் வெளிவந்து வெற்றி பெற்ற ‘சாமி’ படத்தில் விவேக் காமெடி நடிகராக நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Response