‘புதிய கீதை’ ஜெகன் டைரக்சனில் நடிக்கிறார் ஆனந்தி…!

தமிழ்சினிமாவில் விஜய்யை தங்களது அறிமுகப்படத்திலேயே இயக்கம் வாய்ப்பு பெற்ற இயக்குனர்கள் ஒரு சிலரே.. ஆனால் அதை நன்றாக பயன்படுத்திக்கொண்டவர்களை விட அந்த வாய்ப்பை கோட்டை விட்டவர்களே அதிகம். அப்படி ஒரு நபர் தான் விஜய்யை வைத்து பத்து வருடங்களுக்கு முன் ‘புதிய கீதை’ என்கிற படத்தை இயக்கி அறிமுகமான ஜெகன் என்கிற ஜெகந்நாத்..

அதன்பின் கோடம்பாக்கம், ராமன் தேடிய சீதை என ஒன்றிரண்டு படங்களை இயக்கிய ஜெகன், முத்துக்கு முத்தாக படத்திற்குப்பின் குணச்சித்திர நடிகராக மாறினார். ஆனால் இப்போது மீண்டும் டைரக்சன் வாய்ப்பு அவரை தேடி வரவே கூடிய விரைவில் ஒரு படத்தை இயக்கும் வேளைகளில் ஈடுபட்டு வருகிறார். இந்தப்படத்தின் கதாநாயகியாக ஆனந்தி நடிக்கிறார். நகைச்சுவை வேடத்தில் யோகிபாபு நடிக்கிறார்.

Leave a Response