மீண்டும் போலீஸ் அவதாரம் எடுக்கிறார் கார்த்தி..!


கார்த்தி முதன்முறையாக போலீஸ் அதிகாரியாக நடித்த சிறுத்தை படம் மெகா ஹிட்டானது. கார்த்திக்கு ‘ரத்தினவேல் பாண்டியன்’ என்கிற அந்த அதிகாரி வேடம் கம்பீரமாக பொருந்தியது.. இப்போதும் கூட விஜய் டிவியில் மாதத்திற்கு ஒருமுறையாவது ‘சிறுத்தை’ படத்தை தவறாமல் ஒளிபரப்பி விடுகிறார்கள்…

அந்த அளவுக்கு ரசிகர்களிடம் தாக்கத்தை ஏற்படுத்திய கார்த்தி மீண்டும் போலீஸ் அதிகாரி கதையில் நடிக்க இருக்கிறார். இந்தப்படத்தை இயக்குவது ‘சதுரங்க வேட்டை’ படம் மூலம் ரசிகர்களின் கவனம் ஈர்த்த இயக்குனர் ஹெச்.வினோத். படத்திற்கு ‘தீரன் அதிகாரம் ஒன்று’ என தலைப்பு வைத்துள்ளனராம்.

Leave a Response